Asianet News TamilAsianet News Tamil

வெற்றிக் காற்று திசை மாறுமா..? 62 தொகுதிகளில் ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகளில் திமுக, அதிமுக முன்னிலை..!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில், 62 தொகுதிகளில் ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே திமுக, அதிமுக முன்னிலை வகித்துவருகின்றன.
 

Will the wind of success change direction ..? DMK and AIADMK lead in less than 1,000 votes in 62 constituencies
Author
Chennai, First Published May 2, 2021, 12:48 PM IST

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணிக்கு தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போதைய நிலவரப்படி திமுக 142 தொகுதிகளிலும், அதிமுக 91 தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியிலும்  முன்னிலை வகித்து வருகின்றன. இதில் திமுக மட்டும் 116 தொகுதிகளில் தனித்து முன்னிலை வகித்து வருகின்றன. ஆட்சியமைக்குத் தேவையான 118 தொகுதிகளைத் தாண்டி திமுக கூட்டணி முன்னிலை வகித்துவருகிறது. என்றாலும் திமுகவை விரட்டிக் கொண்டிருக்கிறது அதிமுக கூட்டணி.

Will the wind of success change direction ..? DMK and AIADMK lead in less than 1,000 votes in 62 constituencies
மதியம் 12.30 மணி நிலவரப்படி முதல் இரண்டு இடங்களை வகிக்கும் திமுக அல்லது அதிமுக ஆகிய கட்சிகள் 62 தொகுதிகளில் ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில்தான் முன்னிலை வகித்துவருகின்றன. தேர்தல் ஆணையத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலவரம் இது. 62 தொகுதிகளில் வெறும் ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசம் இருப்பதால், இந்தத் தொகுதிகளின் முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறக்கூடும் என்றே நிலையே உள்ளது.Will the wind of success change direction ..? DMK and AIADMK lead in less than 1,000 votes in 62 constituencies
தேர்தல் முடிவு முழுவதுமாகத் தெரிய நள்ளிரவு வரை ஆகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்னும் பல சுற்று வாக்குகள் எண்ணப்பட வேண்டியுள்ளது. எனவே, இந்தத் தொகுதிகளில் வெற்றிகளைப் பொறுத்தே கட்சிகளின் இறுதி நிலவரம் தெரியவரும் எதிர்பார்க்கப்படுகிறது. காட்சிகள் மாறினாலும்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே தோன்றுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios