டாஸ்மாக் விற்பனை நேரம் நீட்டிக்கப்படுமா? காங்கிரஸ் எம்எல்ஏ கோரிக்கையும் செந்தில் பாலாஜி ரியாக்ஷனும்..!
டாஸ்மாக் கடைகளில் கள்ளச்சந்தைகளில் மது விற்கப்படுவது அதிகரித்து வருகிறது. அதை தடுக்க வேண்டும் என்றால் டாஸ்மாக் விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும். ஒரு மணி நேரம் நீட்டித்தால் கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவது தவிர்க்கலாம் என வேண்டுகோள் விடுத்தார்.
கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவதை தவிர்க்க டாஸ்மாக் விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்எல்ஏ ஹசன் மெளலானா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை நடைபெற்றது. இதில், பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினர். அப்போது, காங்கிரஸ் வேளச்சேரி எம்எல்ஏ ஹசன் மெளலானா;- டாஸ்மாக் கடைகளில் கள்ளச்சந்தைகளில் மது விற்கப்படுவது அதிகரித்து வருகிறது. அதை தடுக்க வேண்டும் என்றால் டாஸ்மாக் விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும். ஒரு மணி நேரம் நீட்டித்தால் கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவது தவிர்க்கலாம் என வேண்டுகோள் விடுத்தார்.
விவாதங்களுக்கு பதிலுரை வழங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி;- கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் 96 டாஸ்மாக் மதுபான கடைகள் துறை சார்பாக மூடப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக பள்ளி, கல்லூரிகள், கோவில்களில் அருகில் இருக்கக்கூடிய கடைகள் குறித்து மக்கள் புகார் தெரிவித்ததன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், சென்னை உள்ளிட்ட 5 மண்டலங்களின் கீழ், தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 5,329 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். அதேபோல் ஊதியத்தை அதிகரிக்க கோரி டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு விதமான கோரிக்கைகளை கேட்டு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், டாஸ்மாக் ஊழியர்களின் ஊதியத்தையும் அதிகரித்து அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார். ஆனால், டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்ற ஹசன் மெளலானாவுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.