will rescue dmk from the old mistakes. told stalin

கடந்த கால தவறுகளில் இருந்து திமுகவை மீட்டெடுக்க விரும்புவதாக அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

திமுக தமிழகத்தில் கட்டுக்கோப்பான ஒரு மிகப்பெரிய கட்சியாக விளங்கிவருகிறது. தமிழக அரசியலில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கிவரும் இக்கட்சியை திமுக தலைவர் கருணாநிதி ஒற்றுமையுடன் கட்டிக்காத்து வருகிறார்.

அதே நேரத்தில் திமுக பல நெருக்கடிகளையும் சந்தித்துள்ளது. முக்கியமாக கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் சிக்கியது. ஆனால் அதில் இருந்து அண்மையில் மீண்டது.

இதனிடையே கடந்த ஓராண்டாக கருணாநிதி உடல்நலக்குறைவால் ஆக்டிவ் பாலிடிக்சில் ஈடுபடமுடியாமல் தவித்து வருகிறார். இதனால் கட்சி மற்றும் ஆட்சி தொடர்பான பல முக்கிய முடிவுகள் எடுக்க முடியாமல் அக்கட்சி தவித்து வருவதாகவே தெரிகிறது.

இந்நிலையில் தி இந்து நாளிதழில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக பேட்டி அளித்துள்ளார். அதில் கடந்த கால தவறுகளில் இருந்து திமுகவை மீட்டெடுக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். திமுகவின் மிகப்பெரிய பலமே தொணடர்கள்தான் என்றும் அது கட்சியின் மிக வலுவான கட்டமைப்பு என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர்கள் கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் தனக்கு மிகவும் நெருங்கி நண்பர்கள் என்றும் ஆனால் இது சினிமாவில் மட்டுமே, அரசியலில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஆன்மீகத்தையும், அரசியலையும் தனித்தனியாக பிரித்துத் தான் பார்க்க வேண்டும் என்றும், ஆனால் நண்பர் ரஜினி அதை தலைகீழாக பார்க்கிறார் எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

கருணாநிதி தீவிர அரசியலில் இல்லாத கடந்த ஓராண்டு கடினமாக இருந்தது. முடிவு எடுப்பது பெரிய சுமை என்பது கருணாநிதியின் வாழ்க்கை மூலம் புரிகிறது என தெரிவித்துள்ள ஸ்டாலின், . என்னை கருணாநிதியுடன் ஒப்பிட வேண்டாம், சமகால அரசியல் தலைவர்களுடன் ஒப்பிடுங்கள்என கூறினார்.,

இனி எந்த காலத்திலும் பா.ஜ.,வுடன் கூட்டணி கிடையாது. மதவாத அரசியல் நிலைபாட்டில் தி.மு.கவிற்கு எந்த மாற்றமும் இல்லை என்றும் கருத்துத் தெரிவித்த ஸ்டாலின், . பாஜக அழைப்பு விடுத்திருந்தால் டி.டி.வி., தினகரன் பா.ஜ.வுடன் கூட்டணி வைத்திருப்பா.ர் என்றும் தெரிவித்தார்.