Asianet News TamilAsianet News Tamil

கைதுசெய்யப்படுவாரா மாரிதாஸ்..? திமுக ஆட்சிக்கு வந்ததும் பாய்ந்தது முதல் வழக்கு..!

திமுகவை பற்றியும், தமிழக அரசைப்பற்றியும் மக்கள் மனதில் தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து மாரிதாஸ் செயல்பட்டு வருகிறார். 

Will Maridhas be arrested? The first case that came to light when the DMK came to power ..!
Author
Tamilnadu, First Published Jun 22, 2021, 3:55 PM IST

மாரிதாஸ் தொடர்ந்து சமூக வலைதளங்களில் திமுகவை பற்றி கடுமையாக விமர்சித்து வருகிறார். பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் இவர் அவ்வப்போது அரசியல் தொடர்பான வீடியோக்களையும் பரப்பி வருகிறார்.

 Will Maridhas be arrested? The first case that came to light when the DMK came to power ..!

'’பெட்ரோல் டீசல் விலை குறைக்க முடியாது.-திமுக நிதி அமைச்சர். 2மாதம் முன் டீசல் பெட்ரோல் 5,10 குறைப்போம் என்ற வாக்குறுதி கொடுத்தது திமுக தான். ஆக இதுவும் நீட் தேர்வு போல் அல்வா தான்!  பாதி நூற்றாண்டாக ஒரு மக்களை ஆசையைத் தூண்டி ஏமாற்றி கொள்ளை அடிக்க திமுக தவிர யாராலும் முடியாது.  திமுக அமைச்சர் கூறிவிட்டார் மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயார் ஆகவும். திமுக ஏமாற்றுகிறது என்று நான் சொன்னது தற்போது உண்மை எனப் பெற்றோர்கள் புரிந்து கொள்வர்.Will Maridhas be arrested? The first case that came to light when the DMK came to power ..!

இப்போதும் கூறுகிறேன் திமுக 100% ஏமாற்றும் நோக்கத்தோடு தான் தெரிந்தே முதல் கையெழுத்து நீட் ரத்து எனப் பிரச்சாரம் செய்தது."திமுக வாக்குறுதி கொடுத்தது போல் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நீட் தேர்வு ரத்து ஆகவில்லை என்றால் MLAபதவியை திமுகவினர் ராஜினா செய்வர்" என்று ஸ்டாலின், உதயநிதி கூற முடியுமா? என்றெல்லாம் பதிவிட்டு வருகிறார். இதனை எதிர்த்து திருப்புவனம் தாலுகா, கீழடியை சேர்ந்த வழக்கறிஞரும், திமுக வழக்கறிஞர் அணியை சேர்ந்தவருமான கே.எஸ்.ராஜா, திருப்புவனம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 Will Maridhas be arrested? The first case that came to light when the DMK came to power ..!

அதில், திமுகவை பற்றியும், தமிழக அரசைப்பற்றியும் மக்கள் மனதில் தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து மாரிதாஸ் செயல்பட்டு வருகிறார்.  எனவே அவதூறான செய்தியை பரப்பி வரும் மாரிதாஸ் மீதுநடவடிக்கை எடுக்கவும், அவரது ட்விட்டர் அக்கவுண்டில் பதிவு செய்யப்பட்ட தகவல்களை உடனடியாக நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.   
 

Follow Us:
Download App:
  • android
  • ios