Asianet News TamilAsianet News Tamil

#BREAKING தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த வேறு வழியே இல்லை.. மால்கள், தியேட்டர்கள், கோவில்கள் மூடல்?

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மத வழிபாட்டுதலங்களில் பக்தர்களுக்கான அனுமதி ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாக வாய்ப்புள்ளது. 

Will malls and theaters be closed in Tamil Nadu?
Author
Tamil Nadu, First Published Apr 24, 2021, 12:50 PM IST

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மத வழிபாட்டுதலங்களில் பக்தர்களுக்கான அனுமதி ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாக வாய்ப்புள்ளது. 

தமிழகத்தில் கொரோனா முதல் அலையைவிட 2வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு, முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அப்படி இருந்த போதிலும் நோய் தொற்றின் பாதிப்பு குறையவில்லை. தினசரி பாதிப்பு 14,000ஐ நெருங்கியுள்ளளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் கிடுகிடுவென உயர்ந்துகொண்டே செல்கிறது. 

Will malls and theaters be closed in Tamil Nadu?

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் இன்று பிற்பகல் தலைமைச் செயலாளர், சசுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்துகின்றன. இந்த ஆலோசனைக்கு பிறகு தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் மூட வாய்ப்புள்ளது. 

Will malls and theaters be closed in Tamil Nadu?

அதேபோல், தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் பெரிய, பெரிய கடைகளையும் மூட உத்தரவிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது.   குறிப்பாக மத வழிபாட்டுதலங்களில் பக்தர்களுக்கான அனுமதி ரத்து உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பு இன்று மாலை தமிழக அரசு வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இரவுநேர ஊரடங்கு நேரத்தை அதிகரிக்க உயர்மட்டக்குழு பரிந்துரைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios