எடப்பாடியாருக்கு நெருக்கமான இரண்டு அமைச்சர்கள் ரகசியமாக விமானத்தில் பறந்து, மோடியின் பிரதிநிதிகளை சந்தித்து கூட்டணி விஷயங்களை பேசினார்கள், கிட்டத்தட்ட அ.தி.மு.க மற்றும் பி.ஜே.பி. இடையிலான கூட்டணி உறுதி! என்று தகவல் பரவிக் கிடக்கிறது.
 
அமைச்சர்கள் ரகசியமாய் டெல்லி வந்ததை ஸ்மெல் செய்த, பி.ஜே.பி.யின் புது அ.தி.மு.க. எதிரி தம்பிதுரை  தலைநகரிலிருந்து எங்கோ கிளம்பி  சென்றுவிட்டார்! என்றும் பரபரத்துக் கிடந்தது. இந்நிலையில், திருவாரூர் மாவட்ட குடவாசல் அருகே ராகு கேது கோயிலில் தரிசனத்துக்கு சென்ற தம்பிதுரை மத்திய அரசுக்கு எதிராக முழங்கியிருக்கிறார் ஆவேசமாக. 

“மேக தாது விஷயத்தில் ரெட்டை வேடம் போடுகிறது  மத்திய அரசு. கஜா புயலுக்கு வழங்கவேண்டிய நிவாரண தொகையை இதுவரையில் வழங்கவில்லை. ஜி.எஸ்.டி.க்கு கொடுக்க வேண்டிய ஐந்தாயிரம் கோடியையும் தாவில்லை. இப்படி பல வகைகளில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. 

இதுவரையில் போடப்பட்ட ஐந்து பட்ஜெட்டிலும் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த ஒரு நன்மையும் மத்திய அரசால் தமிழகத்துக்கு கிடைக்கவில்லை.” என்றிருக்கிறார். 

இந்த பேச்சுக்காக தம்பிதுரையை சமூக வலைதளங்களில் வெச்சு வெளுத்துவரும் பி.ஜே.பி.யினர்...”இந்த ஐந்து ஆண்டுகளாக மத்திய அரசு வழங்கிய எல்லா சலுகைகளையும், ஆண்டு, ஆடி அனுபவித்துவிட்டு ஆட்சி முடியும் தருவாயில் மோடி அரசால் தமிழகத்துக்கு நன்மை இல்லை என்று சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

டெல்லியில் குடியிருக்க பங்களா,  நினைத்த இடத்துக்கெல்லாம் பறக்க ஃப்ளைட் வசதி, போனில் ஆரம்பித்து அத்தனையிலும் சலுகை என்று இத்தனை வருடங்களில் உங்களுக்காக மட்டும் பலப்பல லட்சங்கள் மத்திய அரசு நிதியிலிருந்து செலவாகி இருக்கிறது. 

இவ்வளவையும் ஆடி அனுபவித்துவிட்டு இப்போ சீன் போடுவது அடிமட்ட அரசியல்தனம். அட்லீஸ்ட் ஒரு வருடத்துக்கு முன்னால் இதை சொல்லிவிட்டு, எனக்கு சலுகைகள் வேண்டாம் என்று சொல்லியிருந்தாலும் கூட உங்களை மன்னித்திருக்கலாம், பெருமையாய் பார்த்திருக்கலாம். ஆனால் மோடி அரசுக்கு எதிராக பேட்டி கொடுக்க திருவாரூ போன இடத்திலும் ‘நாடாளுமன்ற துணை சபாநாயகர்’ எனும் பதவியை பயன்படுத்தி நீங்கள் அடைந்த சலுகைகள் எத்தனை எத்தனை, லிஸ்ட் போடவா நாங்கள்? இப்போதும் ஒன்ரும் கெட்டுப்போகலை, இந்த ஐந்து வருடங்களாய் அனுபவித்த சலுகைகளுக்கான பணத்தை திருப்பித் தருகிறீர்களா? எங்கள் ஆட்சியால் தமிழகம் நல்லது அனுபவிக்காத போது நீங்கள் மட்டும் ஏன் சலுகை அனுபவிக்க வேண்டும்? சொல்லுங்கள் தம்பிதுரை!” என்று நறுக் சுருக்கென கேட்டிருக்கிறார்கள். 

என்ன சொல்லப்போகிறார் தம்பிதுரை?