அஜித் என்றால் அவரது ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கிறார்கள். திரையுலகில் ஆளுமை செலுத்தி வருகிறார். அவரைப் பற்றிய சிறு தகவல் கிடைத்தாலும் சமுக வலைதளங்களில் ட்ரெண்டாகி விடுகிறது.

 

இந்நிலையில், சமீபத்தில் அஜித் விமானநிலையத்தில் இருந்து வெளியே வரும் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில்  வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வரும் அஜித்துக்கு அங்கு பணியில் இருக்கும் பாதுகாவலர்கள் சல்யூட் அடித்து வரவேற்க, அவர்களிடம் கை குலுக்கி ’நல்லா இருக்கீங்களா..?’என  நலம் விசாரித்து விட்டு அங்கிருந்து அஜித் விடைபெற்றுள்ளார். இந்த வீடியோ  சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. 

 

அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘வலிமை’படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் ஷூட்டிங் தற்போது ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எளிமையானவர்களையும் மதிப்பவர் அஜித். அதற்கு மற்றொரு உதராணம் இந்த வீடியோ..!