Asianet News TamilAsianet News Tamil

ஏன் இந்த மொழி வெறி..? ஹிந்தி மொழி சமூக பிரச்சனையை தீர்க்குமா..? எம்.பி கனிமொழி காட்டம்..

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் இனி அலுவல் மொழியாக இந்தி மொழி மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று பிறபிக்கப்பட்டதாக கூறப்படும் உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஒன்றிய அரசுக்கு ஏன் இந்த மொழி வெறி? என்று திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

Why this obsession about one language, and what will they achieve, will it solve unemployment  -  MP Kanimozhi
Author
Tamilnadu, First Published May 8, 2022, 11:48 AM IST

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் இனி அலுவல் மொழியாக இந்தி மொழி மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று பிறபிக்கப்பட்டதாக கூறப்படும் உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஒன்றிய அரசுக்கு ஏன் இந்த மொழி வெறி? என்று திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மத்திய சுகாதாரத் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்பதே அதன் விரிவாக்கம்.

Why this obsession about one language, and what will they achieve, will it solve unemployment  -  MP Kanimozhi

ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியின் இயக்குனர் பிறப்பித்ததாக கூறப்படும் சுற்றறிக்கை ஒன்று தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் அலுவல் மொழியாக ஹிந்தியை மாற்றுவது தொடர்பாக புதிய உத்தரவு போடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்,” மத்திய அரசு அலுவலகங்களின் பதிவேடுகள் மற்றும் கோப்புகளில், இதுவரை ஹிந்தியும், ஆங்கிலமும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இனி வரும் காலத்தில், அவற்றில் ஹிந்தி மட்டுமே பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.

Why this obsession about one language, and what will they achieve, will it solve unemployment  -  MP Kanimozhi

இந்நிலையில், ஜிப்மர் உத்தரவுக்கு, திமுக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில்,” ஒன்றிய அரசுக்கு ஏன் இந்த மொழி வெறி? ஒன்றிய அரசு திணிக்க முயலும் ஹிந்தி வேலையில்லா திண்டாட்டத்தைத் தீர்க்குமா? சமத்துவமின்மை மாறுமா? ஏதேனும் ஒரு சமூகப் பிரச்னையையாவது திருத்துமா? விரிசல்களை ஆழப்படுத்துவது நல்லதில்லை என தெரிவித்து உள்ளார்.

மேலும் படிக்க: பட்டின பிரவேசத்திற்கு ‘ஓகே’ சொன்ன ஸ்டாலின்.. ஆதீனம் சொன்ன ஷாக்கிங் நியூஸ் !

Follow Us:
Download App:
  • android
  • ios