ஓபிஎஸ்சை நீக்கிவிட்டு சசிகலா முதலமைச்சர் ஆவது குறித்து கருத்து தெரிவித்த திமுகவினர், பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். “நன்றாக செயல்பட்டு வந்த ஒ.பன்னீர்செல்வம் திடீரென ஏன் நீக்கப்பட்டார். அவர் செய்த தவறு என்ன என்பதை அதிமுக தலைமை விளக்க வேண்டும்” என்று திமுக மாவட்ட செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்எல்ஏவுமான ஜெ.அன்பழகன் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், சசிகலா பதவியேற்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், சசிகலாவை முன்னிறுத்துவது மக்களின் எண்ணத்துக்கு எதிரானது என தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சசிகலாவை தேர்ந்தெடுப்பார்கள் என்ற பேச்சு எழுந்தபோதே, மக்களிடம் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதையும் மீறி அதிமுக எம்எல்ஏக்கள் சசிகாவை தேர்ந்தெடுத்து இருப்பது மக்களின் எண்ணத்துக்கு எதிரானது. மக்கள் சசிகலாவை ஏற்கமாட்டார்கள்” என மு.க.ஸ்டாலின் மீண்டும் தெரிவித்தார்.

ஜெயலலிதா பதவி விலகியபோது தான் ஓ.பி.எஸ்.பதவியேற்றார். தவிர, வலுக்கட்டாயமாக பதவியை பறிக்கவில்லை என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.