18 அரியர் வைத்துள்ளவர்களை தெய்வத்தால் கூட பாஸ் பெற வைக்க முடியாது. ஆனால், முதல்வர் பழனிசாமி பாஸ் பெற வைத்துள்ளார் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
18 அரியர் வைத்துள்ளவர்களை தெய்வத்தால் கூட பாஸ் பெற வைக்க முடியாது. ஆனால், முதல்வர் பழனிசாமி பாஸ் பெற வைத்துள்ளார் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்;- அதிமுக அரசின் சாதனைகளை வீடு வீடாக சென்று பிரசாரம் செய்வோம். மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் வந்த இந்த அரசு மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செய்து வருகிறது. நீர் மேலாண்மை திட்டம், சட்டம்- ஒழுங்கு, கொரோனா வைரஸ் தடுப்பு உள்ளிட்டவைகளில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது. அதிமுக அரசு 4 ஆண்டுகளில் 40 ஆயிரம் போராட்டங்களை சந்தித்துள்ளது. எதிர்க்கட்சிகள் தான் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை தூண்டி விடுகின்றன. வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தும் திமுகவின் பாச்சா பலிக்காது.
ஒரு ஊரில் திருவிழா நடைபெறும்போது விழாவிற்கு பலூன் விற்பவர், மிட்டாய் விற்பவர், பஞ்சுமிட்டாய் விற்பவர் பொம்மை விற்பவர் என பலர் வருவார்கள். நாம் அங்கு விற்கக்கூடிய பொருட்களைக் கண்டு ரசித்தாலும் எண்ணமெல்லாம் சாமியை நோக்கியே இருக்கும். அப்படி மக்களுக்கு சாமியாய் இருந்து காப்பவர்தான் நம்முடைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. எங்குத் தேடிப் பார்த்தாலும் இப்படி ஒரு முதல்வரை நாம் பார்க்க முடியாது. 18 அரியர் வைத்துள்ளவர்களை தெய்வத்தால் கூட பாஸ் பெற வைக்க முடியாது. ஆனால், முதல்வர் பழனிசாமி பாஸ் பெற வைத்துள்ளார்.
மேலும், ஓய்வூதியம் வாங்க வேண்டிய வயதில் எதற்காக அரசியல் மக்களைச் சந்திக்க வருகிறீர்கள். இதற்கு முன்னர் சினிமாவில் நடித்துச் சம்பாதித்த பணத்தை யாருக்காவது கொடுத்தீர்களா எனச் சொல்லுங்கள் பார்ப்போம். புயல், மழை, வறட்சி எந்த சூழ்நிலையிலும் பங்களிப்பு செய்யாமல் தற்போது புதிதாக அரசியலுக்கு வந்துள்ளவர்கள், கடமை ஆற்றி கொண்டு இருக்கும் எங்கள் மீது சேற்றை வாரி அடிக்கின்றனர்.
கமல்ஹாசன் போன்றவர்கள் புதிதாக வந்து என்ன திட்டங்களை மக்களுக்கு கொடுக்கப்போகிறார்கள். அவர்கள் என்ன திட்டங்கள் வைத்திருக்கிறார்கள் என்பதை பற்றி இதுவரை கூறியிருக்கிறார்களா? எம்.ஜி.ஆரின் சொந்த வீடு அதிமுக புதிதாக வீடு கட்டியவர்கள் அந்த உரிமையை எடுக்க முடியாது. எம்.ஜி.ஆர். அதிமுகவிற்கே சொந்தம். எம்.ஜி.ஆரின் வாரிசு என்பது போல் கமல்ஹாசன் பேசி வருகிறார். கமல்ஹாசன் எந்த கொள்கையும் இல்லாமல் பிரச்சாரம் செய்வது வேடிக்கையாக இருக்கிறது என விமர்சனம் செய்துள்ளார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 19, 2020, 12:12 PM IST