Asianet News TamilAsianet News Tamil

கங்கை நதியில் நீராடி... யோகிக்கு தெரிந்தது மோடிக்கு தெரியாமல் போச்சே... அகிலேஷ் யாதவ் சொன்ன அழுக்கு காரணம்..!

உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், கங்கை நதி அசுத்தமாக இருப்பதை அறிந்ததால், அதில் நீராடவில்லை 

Why only Modi bathed in Ganges river ..? Akhilesh Yadav says dirty reason ..!
Author
Uttar Pradesh West, First Published Dec 14, 2021, 1:41 PM IST

உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், கங்கை நதி அசுத்தமாக இருப்பதை அறிந்ததால், அதில் நீராடவில்லை என, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார். 

"கங்கையை சுத்தப்படுத்த பாஜக கோடிக்கணக்கில் செலவு செய்தது. ஆனால் முதல்வர் யோகி ஆதித்யநாத் கங்கை அழுக்காக உள்ளது என்று தெரியும். அதனால்தான் அவர் நீராடவில்லை" என்று யாதவ் கூறினார்."கங்கை அன்னை எப்போதாவது சுத்தம் செய்யப்படுமா என்பது கேள்வி? நிதி வெளியேறியது, ஆனால் நதி சுத்தம் செய்யப்படவில்லை," என்று அவர் கூறினார்.Why only Modi bathed in Ganges river ..? Akhilesh Yadav says dirty reason ..!

அகிலேஷின் யாதவின் கருத்துக்கள், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவிருக்கும் உத்தரப் பிரதேசத் தேர்தலில் இரண்டு முக்கியப் போட்டியாளர்களான சமாஜ்வாதி கட்சிக்கும், பாஜகவுக்கும்  இடையேயான தொடர்ச்சியாக அரசியல் தாக்குதல்கள் நடந்து வருகிறது. 

முன்னதாக, மக்கள் தங்கள் இறுதி நாட்களை வாரணாசியில் கழிப்பதாக பிரதமர் நரேந்திர மோடியை அவர் விமர்சித்தார். பிரதமர் மோடியின் வாரணாசி பயணம் குறித்து கேட்டதற்கு, அகிலேஷ் யாதவ் எட்டாவாவில் செய்தியாளர்களிடம், “அது [பனாரஸ்] தங்குவதற்கான இடம். மக்கள் தங்கள் இறுதி நாட்களை பனாரஸில் கழிக்கிறார்கள்.Why only Modi bathed in Ganges river ..? Akhilesh Yadav says dirty reason ..!

பிரதமர் மோடியும், சிவப்பு (தொப்பியின் நிறம்) உ.பி.க்கு ஆபத்தை குறிக்கிறது என்று விமர்சித்தார். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து தற்போது முதல் இந்தியாவின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் களைகட்டத் தொடங்கிவிட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ், சமாஜ்வாடி, பா.ஜ., உள்ளிட்ட மூன்று கட்சிகள் மும்முனைப் போட்டியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் நேற்று காலை பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் காசி விஸ்வநாதர் ஆலயம் திறப்பு விழாவில் பங்கேற்றார். பின்னர் அவர் கங்கை ஆற்றில் நீராடினார்.Why only Modi bathed in Ganges river ..? Akhilesh Yadav says dirty reason ..!
   
இதுகுறித்து உத்தரப்பிரதேசத்தில் பிரசாரம் மேற்கொண்டு வந்த சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், ‘பிரதமர் மோடி உங்களிடமும் என்னிடமும் பொய் கூறலாம், ஆனால் கடவுளிடம் கூற இயலாது’ என விமர்சித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios