why edapadi says that the govt willl be stable in tamilnadu
3௦ எம்எல்ஏக்கள் ஆதரவு தினகரனுக்கு இருந்தாலும் ஆட்சி கவிழாது என எடப்பாடி பழனிசாமி கூறுவது ஏன் தெரியுமா ?
தமிழகத்தில் நிகழும் அசாதாரண அரசியல் சூழலால் தற்போது தமிழகமே ஒருவிதமான பதற்றமான சூழலை சந்தித்து வருகிறது என்று தான் கூற முடியும்.
ஒருபுறம் விவசாயிகள் போராட்டம், மாணவர்கள் சந்தித்து வரும் நீட் தேர்வு உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஒருபுறம் இருக்க, தற்போது ஜாமினில் வெளிவந்துள்ள டிடிவி தினகரன் அரசியல் வாதிகளுக்கு டென்ஷன் கொடுக்க வந்துவிட்டதாகவே கருதுகிறார்கள்
இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், திகார் சிறையில் இருந்து தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள டிடிவி தினகரன் தான் தற்போது “ talk of the tamilnadu “ என்றே சொல்லலாம் .
மடங்கி போன 3௦ எம்எல்ஏக்கள்
தினகரனுக்கு ஆதரவாக தற்போது, 30 எம்.எல்.ஏ க்களை தன் வசமாக்கி உள்ளார் தினகரன் மேலும், தங்க தமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி, பழனியப்பன், தோப்பு வெங்கடாச்சலம் உள்ளிட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ க்கள் பலர் அமைச்சர் கனவில் மிதந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
என்ன செய்வது என சிந்திக்கும் பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி
“என்னாப்பா...இப்படி பண்றாரேப்பா இவரு”-னு கொஞ்சம் யோசனையில் இருந்த பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி மூலமாக டெல்லி மேலிடத்திற்கு ஏதோ தகவல் சொல்லிக்கொண்டே இருக்க , அப்படியா சங்கதி..? என தினகரன் தொடர்பாக ஒரு முக்கிய முடிவு விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பை டெல்லி மேலிடம் ஏற்படுத்தி உள்ளது.
அடுத்து என்ன ?
அதாவது அந்நிய செலாவணி குறித்த தினகரன் மீதான மோசடி வழக்கிலான தீர்ப்பு விரைவு படுத்தினால், தினகரனுக்கு மேலும் சிக்கல் வரும் என பேசப்பட்டு வருகிறதாம்.
அதுமட்டுமில்லமால், இரட்டை இலை சின்னத்திற்காக லஞ்சம் கொடுக்கப்பட்ட பணத்தில், 1 கோடியே 80 லட்சம் ஹவாலா பணம் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளதால், மேலும் ஒரு புதிய வழக்கு கூட தொடர வாய்ப்பு உள்ளது என கூறப் படுகிறது.
ஹவாலா பண மோசடி
ஹவாலா பண மோசடி வழக்கில், மீண்டும் தினகரனை கைது செய்ய வாய்ப்பு உள்ளது என்றும், ஒரு வேளை தினகரன் மீண்டும் கைது செய்யப்பட்டால், இந்த வழக்கில் ஜாமீன் பெறுவதற்கு முன், அந்நிய செலாவணி மோசடி வழக்கின் தீர்ப்பை விரைவு படுத்த திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாகத்தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தங்கள் ஆதரவாளர்களிடம் “ ஆட்சி கவிழ வாய்ப்பு இல்லை என தொடர்ந்து தெரிவித்து வருகிறாராம்.
ஆட்சி கவிழ்கிறதோ இல்லையோ ....தமிழகத்தில் நல்ல ஆட்சி அமைந்தால் சரி ..
