Why does Stalins family hate Khushboo

ஜெ., மரணத்துக்கு பின்னான அரசியல் வெற்றிட சூழலில் கமல், ரஜினிக்கு மட்டுமா அரசியல் ஆசை முளைத்திருக்கிறது? ஏன் கஸ்தூரி, கெளதமி, சுஹாசினி என மாஜி ஹீரோயின்களுக்கும் தான் ‘தானை தலைவியே!’ என்று விளிக்கப்படும் ஆசை வந்திருக்கிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அரசியல் மேடை நோக்கிய படிக்கட்டுகளில் பலரை விடவும் கஸ்தூரி ரொம்பவே முன்னால் நிற்கிறார். அவருக்கான வரவேற்பும் அமோகமாக இருக்கிறது. இதற்கு சில முக்கிய காணங்கள் இருக்கின்றன். கஸ்தூரி அட்சரசுத்தமான தமிழ் பெண்! பக்கத்து வீட்டு அக்கா போல் அவரது தோற்றத்தில் தமிழ்னஸ் கொப்பளிக்கிறது, சமீப காலமாக அரசியல் மற்றும் பொது பிரச்னைகளை பற்றி வெகு வெளிப்படையாக பட்டாசு கொளுத்தும் அவரது தைரியம் பலரை ஈர்த்திருக்கிறது. இவ்வளவு இருந்தும் இன்னமும் நேரடி அரசியலுக்குள் அவர் கால் வைக்காதது ஆச்சரியத்தை தருகிறது. 

அரசியல் ஹீட்டில் இருக்கும் ரஜினி மற்றும் கமல் இருவரையும் கஸ்தூரி சந்தித்துப் பேசியிருப்பது, அவர்களின் கட்சியில் அவர் இணைவாரா? எனும் பேச்சை உருவாக்கியது. ஆனால் அதற்கான எந்த சமிஞையும் கஸ்தூரியிடமிருந்து வரவில்லை. 

இந்நிலையில் கஸ்தூரியை தி.மு.க.வினுள் இழுக்க அக்கட்சி ரொம்பவே மெனெக்கெட்டு வருகிறது. இதில் ஸ்டாலினுக்கு ஏக உடன்பாடாம். குஷ்பு தி.மு.க.வினுள் இணைந்தபோது ஸ்டாலின் மற்றும் அவரை சார்ந்த யாருக்கும் அதில் ஒப்புதல் இல்லை. குஷ்புவுக்கு எதிராக ஒரு போரே அக்கட்சியின் உள் அதிகார வர்க்கம் நடத்தியது. ஆனால் கஸ்தூரி விவகாரத்தில் அப்படியில்லை.

‘நம் மண்ணின் பெண்’ எனும் அடிப்படையில் ஸ்டாலினின் குடும்பமே கஸ்தூரியை தி.மு.க.வில் அரவணைக்க துடிக்கிறது. கஸ்தூரியிடம் தொடர்ந்து பேசி அவரை சம்மதிக்க வைக்க அக்கட்சியை சேர்ந்த நெடு நெடு கவிதாயினி ஒருவருக்கு அஸைன்மெண்ட் கொடுக்கப்பட்டிருப்பதோடு, ஸ்டாலின் குடும்ப உறுப்பினர் ஒருவரும் இதில் நேரடியாக கால் வைத்திருக்கிறார். 

இதே வேளையில் விடுதலை சிறுத்தைகளும் தங்கள் அமைப்பில் இணைய வேண்டும் என்று கஸ்தூரிக்கும் அழைப்பு விடுத்துள்ளனராம். 

ஆனால் கஸ்தூரிக்கு நெருக்கமான தோழிகளோ அவரை ‘கமல் சாருக்கு ஆதரவாய் நில்லு! அவரிடம்தான் உண்மையான சமூக அக்கறை இருக்குது. கறை படியாத புதிய அரசியல்வாதி அவர்.’ என்று சென் டிமெண்டலாக உசுப்புகிறார்களாம். 
கஸ்தூரியின் சாய்ஸ் எதுவோ?!...