Asianet News TamilAsianet News Tamil

திருப்பதிக்கு ஏன் வந்தார் இலங்கை பிரதமர் ராஜபக்சே..? அம்பலமானது ரகசியம்..!

இங்கு கருணாநிதி குடும்பத்தை போலத்தான் குடும்ப அரசியலில் மாட்டித் தவிக்கிறது இலங்கையில் ராஜபக்சே குடும்பமும். இப்போது இலங்கையில் ராஜபக்சே குடும்பத்துக்குள் உச்சகட்ட அதிகார மோதல் நடந்து வருகிறது.

Why did Sri Lankan Prime Minister Rajapaksa come to Tirupati? Exposed is a secret ..!
Author
Sri Lanka, First Published Jan 3, 2022, 11:16 AM IST

இங்கு கருணாநிதி குடும்பத்தை போலத்தான் குடும்ப அரசியலில் மாட்டித் தவிக்கிறது இலங்கையில் ராஜபக்சே குடும்பமும். இப்போது இலங்கையில் ராஜபக்சே குடும்பத்துக்குள் உச்சகட்ட அதிகார மோதல் நடந்து வருகிறது. இதனால் மனம் வெதும்பிப்போன ராஜபக்சே அரசியலில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக கூறப்படுகிறது. Why did Sri Lankan Prime Minister Rajapaksa come to Tirupati? Exposed is a secret ..!

இலங்கை அதிபராக கோத்தபாய ராஜபக்சேவும், பிரதமராக அவரது அண்ணன் மகிந்த ராஜபக்சேவும் பதவியில் உள்ளனர். அவர்களது குடும்பத்தில் பலரும் அமைச்சராகவும், அரசு பதவிகளிலும் இருந்து வருகின்றனர். 

இந்நிலையில் சமீபகாலமாக மகிந்த ராஜபக்சேவை பிரதமர் பதவியில் இருந்து அகற்றுவதற்கான சதிகளில் அவரது குடும்பத்தினரே ஈடுபட்டு வருவதாக சலசலப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்தே பிரதமர் பதவி பறிபோகும் அச்சத்தால் தான் சமீபத்தில் திருப்பதி ஏழுமலையானை தரிசித்து விட்டு சென்றார் மகிந்த ராஜபக்சே என்கிறார்கள். 

மகிந்த ராஜபக்சேவுக்கு பதில் பசில் ராஜபக்சே, சமல் ராஜபக்சே மற்றும் தினேஷ் குணவர்த்தன ஆகியவர்களில் யாராவது ஒருவர் பிரதமராக நியமிக்கப்பரலாம் எனக் கூறப்படுகிறது. Why did Sri Lankan Prime Minister Rajapaksa come to Tirupati? Exposed is a secret ..!

இது தொடர்பாக அவர்களது வட்டாரத்தில், ‘’ பிரதமர் ராஜபக்சேவுக்கு மருத்துவ ரீதியாக ஓய்வு தேவைப்படுகிறது. அதனால் அவருக்கு பதிலாக மாற்று பிரதமர் ஒருவரை நியமிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. பசில் ராஜபக்சே இரட்டை குடியுரிமை பெற்றவராக இருக்கிறார். அவருக்கு எதிர்ப்பு எழாதவரை அவருக்குதான் மாற்று பிரதமர் பதவிக்கான வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.

இதனிடையே தாம் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக வெளியான செய்திகளை மகிந்த ராஜபக்சே திட்டவட்டமாக மறுத்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios