வைகுண்ட சாமி கோயிலுக்கு இபிஎஸ் சென்றது ஏன்? பாஜகவைப் பார்த்து பயப்படுகிறதா அதிமுக.? அரசியல் அஸ்திரம் எடுபடுமா?

எடப்பாடி பழனிசாமிக்கு ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு அழைப்பு வந்த நிலையில், சாமிதோப்பு அய்யா வைக்குண்ட சாமி கோயிக்கு சென்றது ஏன்.? என கேள்வி எழுந்துள்ளது. 

Why did Edappadi Palaniswami not go to the opening ceremony of Ram Temple KAK

அதிமுகவும் தேர்தல் தந்திரமும்

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் நடைபெற்ற பல்வேறு மோதல்களுக்கு பிறகு தலைமை பொறுப்பை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றியுள்ளார். இதனையடுத்து நடைபெற்ற முதல் இடைத்தேர்தலான ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக படு தோல்வி அடைந்தது. இதனையடுத்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலை எடப்பாடி பழனிசாமிக்கு உருவாகியுள்ளது. இதனையடுத்து அதிமுக நிர்வாகளிடன் தனித்தனியே ஆலோசனை நடத்தியதில் தமிழகத்தில் பாஜக கூட்டணியோடு இணைந்திருந்தால் நமக்கு சிறுபான்மையினரின் வாக்கு ஒன்று கூட கிடைக்காது இதனால் நமது செல்வாக்கு சரியும். நம்மை பயன்படுத்தி பாஜக வாக்கு சதவிகித்த்தை அதிகரிக்க பார்ப்பதாக ஆலோசனை தெரிவித்தனர்.

Why did Edappadi Palaniswami not go to the opening ceremony of Ram Temple KAK

ராமர் கோயில் விழாவில் அதிமுக.?

இதனை தொடர்ந்து தான் அண்ணாமலை மீது பழியை போட்டு கடந்த 5 வருடங்களாக தொடர்ந்த கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி எண்டு கார்டு போட்டார். இதனையடுத்து சிறுபான்மை அமைப்பினரை தங்கள் பக்கம் கொண்டுவர எஸ்.பி.வேலுமணி திட்டமிட்டார். அப்போது தான் தமிழகத்தில் முக்கிய சிறுபான்மை அமைப்பான எஸ்டிபிஐயை தங்கள் அணிக்கு இழுத்தார். இதனை தொடர்ந்து மதுரையில் நடைபெற்ற எஸ்டிபிஐ மாநாட்டிலும் பங்கேற்ற அவர், இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை என உறுதி பட தெரிவித்தார். இந்த சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு ராமர் கோயில் திறப்பு விழாவிற்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டது. அதிமுக நிர்வாகிகள் பங்கேற்பார்களா.? என்ற கேள்வி எழுந்தது. அப்போது தான் தனக்கு கால் வலி அதனால் செல்வது கடினம் என எடப்பாடி பழனிசாமி  கூறியிருந்தார்.

தேர்தல் பணியை தொடங்கிய அதிமுக.! தொகுதி பங்கீடு,தேர்தல் அறிக்கை குழுவில் யார் ? யார் ? இடம் பெற்றுள்ளார்கள்.?

Why did Edappadi Palaniswami not go to the opening ceremony of Ram Temple KAK

அய்யா வைகுண்டர் கோயிலுக்கு சென்ற இபிஎஸ்

இருந்து போதும் அதிமுகவில் நிலைப்பாடு உறுதியாக அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று பாஜக தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் பலரும் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற நிலையில் எடப்பாடி பழனிசாமியோ ராமர் கோயிலுக்கு செல்லாமல், விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து கன்னியாகுமரியில் உள்ள சாமிதோப்பு அய்யா வைக்குண்ட சாமி கோயிலுக்கு சென்றார். இந்த நிகழ்வு அரசியல் தலைவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.  

Why did Edappadi Palaniswami not go to the opening ceremony of Ram Temple KAK

யார் இந்த அய்யா வைகுண்டர்:

இந்தநிலையில் யார் இந்த அய்யா வைக்குண்ட சாமி என்ற கேள்வி எழுந்தது. சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் அவதாரமாக பார்க்கப்பட்டவர் அய்யா வைகுண்டர். கன்னியாகுமரி மாவட்டம் தமாரைக்குளம் கிராமம் சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி உள்ளது. இங்கு  அனைத்து சமயங்களைச் சார்ந்தவர்களும் வருகை தரும் முக்கியமான புனித இடம் ஆகும். மதச்சார்பின்மைக்கு முக்கிய அம்சமாக இது விளங்குகிறது. இதனையடுத்து தான் எடப்பாடி பழனிசாமி அங்கு சென்றதாக கூறப்படுகிறது. புராணங்களின்படி, நாராயணரின் அவதாரமாக கருதப்படும் அய்யா வைகுண்டா் தவம் செய்து இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Why did Edappadi Palaniswami not go to the opening ceremony of Ram Temple KAK

ராமர் கோயிலுக்கு செல்லாதது ஏன்.?

நாடாளுமன்ற தேர்தலை விட அதிமுகவிற்கு சட்டமன்ற தேர்தலே முக்கியமாக கருதப்படுகிறது. எனவே தமிழகத்தில் சிறுபான்மையினர் வாக்குகளை கைப்பற்றினால் மட்டுமே வெற்றியை தன் வசப்படுத்தும் முடியும். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என முடிவுக்கு வந்தனர். இந்தநிலையில் ராமர் கோயில் விழாவிற்கு சென்றால் சிறுபான்மையினர் மத்தியில் அதிருப்தி ஏற்படும் என்ற காரணத்தாலே எடப்பாடி பழனிசாமி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை தவிர்த்தாக கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்

கண் திறந்து பார்த்து, புன்னகை செய்யும் அயோத்தி ராமர் சிலை.. பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ..
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios