நீங்க ஏன் ஜெயிலில் கஷ்டப்படுறீங்க.? ஊழல்வாதிங்க பெயரை சொல்லுங்க பார்த்தா.. பற்ற வைக்கும் மிதுன் சக்கரவர்த்தி!

ஊழலில் ஈடுபட்டவர்களின் பெயர்களை பார்த்தா சாட்டர்ஜி வெளியிட வேண்டும் என்றும் நடிகரும் பாஜகவைச் சேர்ந்தவருமான மிதுன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

Why are you suffering in jail? Tell me the name of the corrupt persons..Mithun Chakraborty request to Partha chatterjee

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் மூத்த அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி ஆசிரியர்கள் பணியிடங்களில் முறைகேடு செய்ததாகப் புகார் எழுந்தது. அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் நடத்திய சோதனைகளில் பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளர் வீட்டிலிருந்து பெட்டி பெட்டியாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தப் பெட்டிகளில் சுமார் ரூ.20 கோடி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே பார்த்தா சட்டர்ஜியின் நெருங்கிய உதவியாளரும், நடிகையுமான அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்தும் ரூ. 21 கோடிப் பணத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இதையும் படிங்க: ஐயோ மேடம் என்ன மன்னிச்சிடுங்க.. தெரியாம உளறிட்டேன் , ஓவரா பேசி உடம்பை புண்ணாக்கிக் கொண்ட காங் எம்.பி.

Why are you suffering in jail? Tell me the name of the corrupt persons..Mithun Chakraborty request to Partha chatterjee

மேலும் அர்பிதா முகர்ஜியின் இரண்டாவது அடுக்குமாடிக் குடியிருப்பில் ரூ. 28 கோடி மதிப்புள்ள ரொக்க பணமும் 5 கிலோ எடை தங்கம், வெள்ளி நகைகளையும் அமலாக்கத் துறையினர் கைப்பற்றினர். இவை அனைத்தும் பார்த்தா சட்டர்ஜிக்கு சொந்தமானது என்று அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் அர்பிதா தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பார்த்தா சட்டர்ஜிக்கு பெரும் சிக்கல் எழுந்துள்ளது. இதற்கிடையே பார்த்தா சாட்டர்ஜி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். அவருடைய கட்சிப் பதவியும் பறிக்கவிட்டது. பார்த்தா சாட்டர்ஜிக்கு நெருக்கடி முற்றியுள்ள நிலையில், இந்த ஊழலில் ஈடுபட்டவர்கள் பெயர்களை வெளியிடும்படி பாஜக பார்த்தா சட்டர்ஜிக்கு நடிகரும் பாஜகவைச் சேர்ந்தவருமான மிதுன் சக்ரவர்த்தி வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: குஜராத்திகள் இல்லையென்றால் இங்கு ஒன்றுமில்லை..சர்ச்சையை கிளப்பிய ஆளுநர் !

Why are you suffering in jail? Tell me the name of the corrupt persons..Mithun Chakraborty request to Partha chatterjee

இதுதொடர்பாக மிதுன் சக்ரவர்த்தி கூறுகையில், “ஆசிரியர் பணி நியமன ஊழலில் ஈடுபட்டவர்களின் பெயர்களை பார்த்தா சட்டர்ஜி வெளியிட வேண்டும். எல்லா பணமும் பார்த்தா சட்டர்ஜிக்குரியது என்பதை நான் நம்பவில்லை. வேறொருவருக்கு  சொந்தமான பணத்தின் பாதுகாவலராக பார்த்தா சட்டர்ஜி இருந்திருக்க வேண்டும். அவர் இப்போது பேச வேண்டும். அவர் சிறையில் ஏன் கஷ்டப்பட வேண்டும்?” என்று மிதுன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.


இதையும் படிங்க: திமுக ஆட்சியில் ஒரு மதுக்கடையைக்கூட மூடல... தேர்தல் அறிக்கையில் சொன்னதை நிறைவேற்றல.. அன்புமணி ஆவேசம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios