why amit sha son jai sha closed his company and reopen it


நவம்பர் 8 நெருங்க நெருங்க நடுவன் அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் தங்களை உத்வேகத்துடன் உருவேற்றிக் கொண்டுள்ளன. காரணம், பண மதிப்பிழப்பு அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டு முடிவடைகிறது. அந்த நாளை கறுப்பு தினமாக அறிவித்து ஆர்பாட்டம், கண்டனம் என்று அமளிதுமளியாக்க திட்டமிட்டுள்ளனர். 

இந்நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் என்ன ஊழல் நடைபெற்றுள்ளது? என்றுபீட்டர் அல்போன்ஸிடம் கேட்டதற்கு, “அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவின் கம்பெனி அதிக லாபம் சம்பாதித்திருப்பது இப்போது வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. அந்த நிறுவனத்துக்கு திடீரென அதிகரித்த வெளிநாட்டு தொழில் பரிவர்த்தனைகள், லாபத்தில் நடந்த நிறுவனங்களை அவர் திடீரென மூடியது, திடீரென புதிய நிறுவனங்களை தொடங்கியது போன்றவையெல்லாம் கருப்புப்பண பரிமாற்றங்களின் நடைமுறையாகவே தெரிகிறது. 

மத்திய அரசு சொல்வது போல் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா பொருளாதார வளர்ச்சியின் பெரும் இலக்கை பெருமையுடன் அடையுமென்பதை நான் நம்ப தயாரில்லை. 

மக்களால் தீபாவளி போன்ற பண்டிகைகளைக் கூட கொண்டாட முடியவில்லை. பண சுழற்சி என்பதே இல்லை. வட்டி கூட கட்ட முடியாமல் தீக்கு இரையாகும் கொடூரம் இந்த மண்ணில் நடக்கிறதே!

சர்வதேச அளவில் பொருளாதார சீரழிவு இருந்த சூழலில் மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இதை தேசிய மக்களின் சார்பாக நாங்கள் கூடி நின்று கண்டிப்போமே தவிர தூக்கி வைத்து கொஞ்சமாட்டோம்.” என்று போட்டுப் பொளந்துள்ளார். 
பீட்டருக்கு பேசச் சொல்லியா கொடுக்க வேண்டும்?