Asianet News TamilAsianet News Tamil

யார் ஆட்சிக்கு வந்தாலும் நான்தான்... மு.க.ஸ்டாலினிடம் அப்ரூவராகத் துடிக்கும் அதிகாரி..!

ரூ. 3000 கோடிக்கான கமிஷனான ரூ 160 கோடியை திமுக ஆட்சிக்கு வந்தால் வசூல் செய்து திமுகவிடம் கொடுத்து விட்டு சரண்டராகி விடுவேன்’’எனக் கூறி வருகிறாராம் நந்தகுமார்.   
 

Whoever comes to power, I am ... the officer who beats MK Stalin as an approver
Author
Tamil Nadu, First Published Mar 25, 2021, 6:26 PM IST

சிறப்பு திட்டங்கள், மழைநீர்வடிகால் துறை, பேருந்து சாலைகள் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு முன்பு கண்காணிப்பு பொறியாளராக இருந்த நந்தகுமார் தான், தற்போது தலைமை பொறியாளராக இருக்கிறார். தலைமைப் பொறியாளர் நந்தகுமார் தனக்கு வேண்டியர்களுக்கு மட்டுமே திரும்பத்திரும்ப ஒப்பந்தம் கொடுத்திருப்பதாகவும், அந்த ஒப்பந்ததாரர்களும் அவருடைய பினாமிகள் என்றே சென்னை மாநகராட்சி வட்டாரம் பேசிக்கொள்கிறது. இப்படி ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இவர் மீது இருப்பதாக கூறுகிறார்கள். 
 
இந்நிலையில் தேர்தலுக்கு முன்பாக 3 மாதத்தில் விடவேண்டியெ டெண்டரை குறுகிய காலத்தில் 12 சதவிகித கமிஷனுக்காக (ரூ.160 கோடி ரூபாய்) அவசர அவசரமாக டெண்டருக்கு விட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகளே குற்றம்சாட்டுகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுக ஆட்சியில் விடப்படும் கடைசி மூன்றுமாத டெண்டர்கள் ஆராயப்படும் என ஏற்கெனவே மு.க.ஸ்டாலின் எச்சரித்து இருந்தார். Whoever comes to power, I am ... the officer who beats MK Stalin as an approver

ஆனால் தேர்தலுக்கு முன்பே சென்னை மாநகராட்சி மீது மு.க.ஸ்டாலின் பார்வை விழுந்து இருக்கிறது. சென்னை மாநகராட்சியில் மிக நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்தும் தலைமை பொறியாளர் நந்தகுமார் மீது திமுகவின் ஒட்டு மொத்தப்பார்வையும் குவிந்து இருக்கிறது.  அவசராவசரமாக ரூ 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இந்த டெண்டர் விடப்பட்டுள்ளது. அதிலும் சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.1000 கோடி  ஒதுக்கப்பட வேண்டும் என்கிறார்கள். ஆனால் கொரோனாவால் நஷ்டத்தில் இயங்கி வருகிறது சென்னை மாநகராட்சி. நஷ்டத்தில் இருக்கும்போத் அவசர அவசரமாக ரூ. 1000 கோடியை மாநகராட்சியால் எப்படி செலுத்த முடியும். ஆகவே இந்த டெண்டர் முறையானதல்ல என்கிறார்கள் மாநகராட்சியில் இருக்கும் விவரமறிந்த அதிகாரிகள்.Whoever comes to power, I am ... the officer who beats MK Stalin as an approver

அமைச்சர் வேலுமணி தரப்புக்கு ஆல் இன் ஆலாக இருக்கும் நந்தகுமார், அன்பரசனை கையில் வைத்துக் கொண்டு ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி வருவதாகவும், உள்ளாட்சி துறையிலும், சென்னை மாநகராட்சியிலும் வசூலாகும் ஸ்வீட்டுகளை வசூல் செய்யும் ஏஜெண்டாக இருக்கிறார் என்றும் அதிரடி குற்றச்சாட்டுக்களை அடுக்குகிறார்கள். சென்னை மாநகராட்சி இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையிலும், கனரா வங்கியிலும் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் நந்தகுமார், வசூலாகும் தொகையை அவரது மேனேஜர் பென்னியை வைத்து அக்கவுண்டில் டெபாசிட் செய்வாராம். 

நந்தகுமாரை பற்றிய புகார்கள் பல முறை வந்துள்ளன. சென்னை மாநகராட்சியில் ரூ.1500 கோடி ஊழல் என மக்கள் செய்தி மையம் மாநகராட்சியை சுற்றிலும் வால்போஸ்டர்கள் அடித்து அம்பலப்படுத்தியது. இப்படி நந்தகுமாரைப்பற்றிய ஏகப்பட்ட புகார்கள் அறிவாலயத்தை எட்டியிருப்பதாக கூறுகிறார்கள். சென்னை மாநகராட்சியில் தலைமை பொறியாளர் புகழேந்தி அமைச்சர் தரப்புக்கு பணிந்து செல்லவில்லை என்பதால்தான் மாற்றப்பட்டார். அதைத் திட்டமிட்டு செய்து தன் வசூல் வேட்டையில் தடையேதும் இல்லாமல் பார்த்துக் கொண்டது நந்தகுமார் என்கிறார்கள். தமிழக விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சியின் தலைவர் பொன்குமார், சென்னை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சென்னை மாநகருக்குள்ளேயே ஒரு தொகுதியை எதிர்பார்த்தார். நந்தகுமாரின் சம்பந்தி இந்த பொன்குமார் என்பதால் அவரின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டாராம் மு.க.ஸ்டாலின். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் டார்கெட் இந்த நந்தகுமார் மீது தான் என்கிறார்கள். Whoever comes to power, I am ... the officer who beats MK Stalin as an approver

ஆனால் நந்தகுமாரோ யார் ஆட்சிக்கு வந்தாலும் நான் தான் இந்த பதவியில் இருப்பேன் என்று கூறி வருகிறாராம். அதிமுக ஆட்சிக்கு வந்தால் அன்பரசனை வைத்து பதவியை தக்க வைத்து கொள்வது. திமுக ஆட்சிக்கு வந்தால் சம்பந்த பொன்குமாரை வைத்து பதவியை தக்க வைத்துக் கொண்டு வேலுமணிக்கு எதிராக ஆப்ரூவராகி மு.க.ஸ்டாலிடம் சரண்டராவது என்கிற திட்டத்தில் இருக்கிறார். அதற்காக விடப்பட்ட டெண்டர் பணத்தின் கமிஷனை வசூலிக்காமல் இருக்கிறார் நந்தகுமார். அந்த ரூ. 3000 கோடிக்கான கமிஷனான ரூ 160 கோடியை திமுக ஆட்சிக்கு வந்தால் வசூல் செய்து திமுகவிடம் கொடுத்து விட்டு சரண்டராகி விடுவேன்’’எனக் கூறி வருகிறாராம் நந்தகுமார்.   

Follow Us:
Download App:
  • android
  • ios