Asianet News TamilAsianet News Tamil

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 யாருக்கு கிடைக்கும்? யாருக்கெல்லாம் கிடைக்காது? அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்.!

தமிழ்நாடு அரசின் சார்பில் 2023 - 24-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனால் நேற்று தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் மற்றும் பல்வேறு சலுகைகளும் இடம் பெற்றிருந்தனர்.

Who will get Rs.1000 womens allowance? Minister Geetha Jeevan
Author
First Published Mar 21, 2023, 7:04 AM IST

தமிழக பட்ஜெட்டில் மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாய் யார், யாருக்கு கிடைக்கும் என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார். 

தமிழ்நாடு அரசின் சார்பில் 2023 - 24-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனால் நேற்று தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் மற்றும் பல்வேறு சலுகைகளும் இடம் பெற்றிருந்தனர். அதிலும், குறிப்பாக பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வந்த மகளிருக்கான உரிமைத்தொகை அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதையும் படிங்க;- மகளிர் உரிமை தொகை மாதம் ஆயிரம் ரூபாய்..! செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும்- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

Who will get Rs.1000 womens allowance? Minister Geetha Jeevan

அண்ணா பிறந்தநாள் செப்டம்பர் 15-ம் தேதி அன்று மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.  இத்திட்டத்திற்காக 7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் மகளிர் உரிமைத் தொகைக்கு தகுதியானவர்கள் குறித்த வரைமுறைகள் விரையில் அறிவிக்கப்படும் நிதியமைச்சர் தெரிவித்திருந்தார். 

Who will get Rs.1000 womens allowance? Minister Geetha Jeevan

இந்நிலையில் மகளிர் உரிமைத்தொகை யாருக்குக் கிடைக்கும் என்பதை தமிழக சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் கீதா ஜீவன் விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேட்டியளிக்கையில்;- 80 லட்சத்துக்கும் அததிகமான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட வாய்ப்புள்ளது. மாதம் ரூ.1000 உதவித் தொகை பெற்றுவரும் வயதான பெண்கள், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளி பெண்கள் இதில் மறுபடியும் பயனடையமாட்டார்கள்.

இதையும் படிங்க;-  சசிகலா, டிடிவி.தினகரனுடன் கைகோர்க்கிறாரா ஓபிஎஸ்? பெரியகுளத்தில் வைரலாகும் பேனரால் பரபரப்பு..!

Who will get Rs.1000 womens allowance? Minister Geetha Jeevan

அதேபோல், அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர் உள்ளிட்டோர் பயன்பெற வாய்ப்பில்லை. இதுதொடர்பாக வழிகாட்டுதல்களை முதல்வர் விரைவில் வெளியிடுவார். என அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios