Asianet News TamilAsianet News Tamil

பீகாரில் ஆட்சியமைக்கப்போவது யார்..? அரசியல் கட்சிகள் இடையே உச்சகட்ட பரபரப்பு..!

பீகாரில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை 8 மணிக்கு எண்ணப்படுகிறது.
 

Who will come to power in Bihar
Author
Chennai, First Published Nov 9, 2020, 8:44 PM IST

பீகாரில் மொத்தமுள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. தேர்தலில் மொத்தம் 1204 வேட்பாளர்கள் களமிறங்கினர். இத்தேர்தலில் சராசரியாக 53 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாயின. இத்தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி, ராஷ்ட்ரிய ஜனதாதளம் - காங்கிரஸ் - இடதுசாரிகள் அடங்கிய மகா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.Who will come to power in Bihar
மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 122 தொகுதிகளைக் கைப்பற்றும் கூட்டணியே ஆட்சியைக் கைப்பற்ற முடியும். தேர்தல் முடிந்த கையோடு வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின. பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் ஆர்.ஜே.டி.-காங்கிரஸ் கூட்டணியே ஆட்சியைக் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளன. கருத்துக்கணிப்புகள் உண்மையாகுமா என்பது நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கைத் தொடங்கும்போது தெரிய வரும். பிற்பகலுக்குள் ஆட்சி அமைக்கும் கூட்டணி எது எனத் தெரிந்துவிடும்.
வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது பீகாரில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துணை ராணுவத்தினரும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios