Asianet News TamilAsianet News Tamil

அமமுகவில் வேலூர் தொகுதி வேட்பாளர் யார்..? அவரேதான் போட்டியிடுவாரா மாட்டாரா என டவுட்!

நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு பிறகு அமமுகவிலிருந்து கட்சி நிர்வாகிகள் பலரும் அதிமுகவுக்கு திரும்பிவருகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில் பாண்டுரங்கன் தேர்தலில் நிற்பாரா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. 

Who will be AMMK Candidate in vellore?
Author
Chennai, First Published Jul 5, 2019, 6:12 AM IST

வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் போட்டியிடுவார் என கூறப்படுகிறது.Who will be AMMK Candidate in vellore?
வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5 அன்று தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 11 முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும், அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதி கட்சி நிறுவனர் ஏ.சி. சண்முகமும் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.

Who will be AMMK Candidate in vellore?
அமமுக சார்பில் யார் தேர்தலில் நிறுத்தப்படுவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கடந்த ஏப்ரலில் நடக்க இருந்த வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அமமும் சார்பில் முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் போட்டியிட்டார். தேர்தல் ரத்துக்கு பிறகு பேட்டியளித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “எப்போது தேர்தல் நடந்தாலும் பாண்டுரங்கனே வேட்பாளராக இருப்பார்” என்று தெரிவித்தார்.Who will be AMMK Candidate in vellore?
 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு பிறகு அமமுகவிலிருந்து கட்சி நிர்வாகிகள் பலரும் அதிமுகவுக்கு திரும்பிவருகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில் பாண்டுரங்கன் தேர்தலில் நிற்பாரா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. ஆனால், முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கனே வேலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக இருப்பார் என்று அமமுக வட்டாரங்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக டிடிவி தினகரன் ஓரிறு நாட்களில் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  பாண்டுரங்கன் அமமுகவில் இணைவதற்கு முன்பு தீபா அம்மா பேரவையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios