Asianet News TamilAsianet News Tamil

WHO விஞ்ஞானியே இப்ப நம்ம CM வுடன்... ஒமைக்ரான் தலைதெறிக்க ஓடப்போகுது..

இந்நிலையில் தமிழக அரசும் புத்தாண்டு கொண்டாட்டம் உள்ளிட்டவற்றை தவிரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.  இப்படிப்பட்ட சூழ்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சாமிநாதன் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்துள்ளார். அவருடன் எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் பரசுராமன் உடன் இருந்தார்.

WHO scientist is now with our CM ... Omicron is going to run away ..
Author
Chennai, First Published Dec 28, 2021, 1:17 PM IST

தமிழகத்தில் ஒமைக்ரான் தோற்று வேகமாக பரவி வரும் நிலையில், தமிழக அரசும் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வரும் இந்நிலையில்   உலகச் சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தமிழக முதலமைச்சரை சந்தித்துள்ளார். அதற்கான புகைப்படத்தை முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த நெருக்கடியான நிலையில் இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

கடந்த 2009-ம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. 150க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்த வைரசால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். தடுப்பூசியால் மட்டுமே இந்த வைரஸில் இருந்து தப்பிக்க முடியும் என்ற முடிவுடன் ஒட்டுமொத்த உலக நாடுகளும் தடுப்பூசி ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந் நிலையில் இந்தியா ஒன்றுக்கு நான்கு தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளது. அதில் இரண்டு தடுப்பூசிகள் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்துவருகிறது. தடுப்பூசிகள் அனைத்தும் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.  ஆனால் கொரோனா வைரஸ் என்பது அடிக்கடி உருமாறி, அடுத்தடுத்து படிநிலைகளில் தன்னை தகவமைத்து வருகிறது. எனவே இதை முழுவதுமாக கட்டுப்படுத்துவது விஞ்ஞானிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது.

WHO scientist is now with our CM ... Omicron is going to run away ..

இந்தியாவில் டெல்டாவகை வைரசாக உருமாறிய கொரோனா இரண்டாவது அலையாக உருவெடுத்தது. அதனால் மிகப்பெரிய உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஏற்பட்டது. தற்போது  தென்னாப்பிரிக்காவில்  கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒமைக்ரான்வகை வைரஸ் 12 நாடுகளுக்கும் அதிகமாக பரவி உள்ளது. இந்நிலையில் இந்த வைரஸ் இந்தியாவிலும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக இது சமூக  பரவலாக மாறிவிட்டது என்றும் கூறப்படுகிறது. அதாவது சென்னையில் அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு ஒரு மைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. அவர் எந்த வெளிநாட்டு தொடர்பு இல்லாதவர். ஆனால் அவருக்கு எப்படி ஒமைக்ரான் ஏற்பட்டது என்பது தெரியவில்லை. அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் செவிலியர்கள், உட்பட 37 பேருக்கு ஒமைக்ரான் தொற்று அறிகுறி உள்ளது. எனவே இது சமூக பரவலாக மாறி இருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. 

WHO scientist is now with our CM ... Omicron is going to run away ..

இந்த வைரஸ் வெளிநாட்டு தொடர்பு இல்லாதவர்களிடமும் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருந்தால் மட்டுமே இதை கட்டுப்படுத்த முடியும் என சுகாதார துறை செயலாளர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். எனவே எதிர்வரும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் கூறுகையில், சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னை மக்கள் முகக்கவசம் அணிவது 100 சதவீதம் உறுதி செய்யப்பட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியில் வரும் ஒவ்வொருவரும் 100% முக கவசம் அணிய வேண்டும். அதேபோல் புத்தாண்டு  கொண்டாட்டத்தை தவிர்க்க வேண்டும். நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றால் கண்காணிக்கப்படும் என தெரிவித்துள்ளார். பெரிய நட்சத்திர விடுதிகளில் இதுவரை புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக அறிவிப்பு வராமல் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

WHO scientist is now with our CM ... Omicron is going to run away ..

ஒமைக்ரானால் தமிழகத்தில் 34 பேரில் 12 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது 5 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறினார். மொத்தம் இதுவரை 118 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்திற்கு மத்திய மருத்துவ குழு முகாமிட்டு ஒமைக்ரான் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மத்திய மருத்துவ குழு வல்லுநர்கள் டாக்டர் வனிதா, புர்பசா,  சந்தோஷ்குமார், தினேஷ்பாபு ஆகிய 4 பேர் கொண்ட மத்திய மருத்துவ குழுவினர் டெல்லியில் இருந்து கடந்த 27ஆம் தேதி இரவு சென்னை வந்தனர். சென்னை வந்துள்ள மத்திய குழு தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து ஐந்து நாட்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இந்நிலையில் நேற்று டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள கட்டளை மையம், மாநில தடுப்பூசி கிடங்கு, மற்றும் மரபணு சோதனை மையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து பிற்பகலில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் பரிசோதனை மேற்கொண்டனர்.

WHO scientist is now with our CM ... Omicron is going to run away ..

இந்நிலையில் இரண்டாவது நாளாக சென்னை வளசரவாக்கம் கற்பகாம்பாள் நகரில் முதலாவது ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இல்லம் மற்றும் அங்குள்ள பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொள்கின்றனர். இதன்காரணமாக தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்படும் கூடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஒமைக்ரான் வேகமெடுக்கும் பட்சத்தில் அதற்கான சாத்தியக் கூறுகளும் இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. குறிப்பாக பொது இடங்களில் பெரும்பாலானோர் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளிகளை தவிர்த்து வரும் அவல நிலையும் தொடர்கிறது. இந்நிலையில் ஒமைக்ரான் வேகம் எடுக்கும் பட்சத்தில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒமைக்ரான் டெல்டா வைரஸை காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக பரவக்கூடியது என்று ஏற்கனவே உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. அனைவரும் நிச்சயம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கை கழுவுதல், முகக்கவசம் அணிதல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும் என எச்சரித்துள்ளது. 

WHO scientist is now with our CM ... Omicron is going to run away ..

இந்நிலையில் தமிழக அரசும் புத்தாண்டு கொண்டாட்டம் உள்ளிட்டவற்றை தவிரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.  இப்படிப்பட்ட சூழ்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சாமிநாதன் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்துள்ளார். அவருடன் எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் பரசுராமன் உடன் இருந்தார். இந்த சந்திப்பின்போது முதலமைச்சருக்கு சௌமிய சாமிநாதன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் சௌமியா சாமிநாதன் சந்திப்புக்கான காரணம் குறித்து அரசு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட வில்லை. ஆனாலும் ஒமைக்ரான் வைரஸ் வேகம்மெடுத்து வரும் நிலையில், அதுதொடர்பாக முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வரும் நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சாமிநாதன் முதல்வரை சந்தித்து இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.  

 

Follow Us:
Download App:
  • android
  • ios