அதிமுக கூட்டணியில், தேமுதிகவிற்கு, நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதிகளில் யார் யாருக்கு சீட் கொடுக்க விஜயகாந்த் முடிவெடுத்துள்ள தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

 

அதிமுக கூட்டணியி 4 தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டது. அதன்படி கள்ளக்குறிச்சி, வடசென்ன, திருச்சி, அல்லது கிருஷ்ணகிரி, விருதுநகர் தொகுதிகளை ஒதுக்கக் கேட்டு வருகிறது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் தேமுதிக, தலைமை தேர்வு செய்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சியில் தேமுதிக விழுப்புரம் மாவட்ட செயலாளர், வெங்கடேசனும், திருச்சியில், மாநில மாணவரணி செயலர், விஜயகுமாரை களமிறக்க கட்சி தலைமை முடிவெடுத்துள்ளது. 

கிருஷ்ணகிரியில், கட்சியின் அவைத் தலைவர் இளங்கோவன், மாவட்டசெயலர் அன்பரசன் ஆகியோரில் ஒருவர், வேட்பாளராக வாய்ப்புள்ளது. விருதுநகரில் எல்.கே.சுதீஷை தேர்வு செய்ய, கட்சி தலைமை விரும்புகிறது. வடசென்னையில், மாநில துணை செயலர் பார்த்தசாரதி அல்லது மாவட்டசெயலர் மதிவாணன் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது.

 

ஆனால், கள்ளக்குறிச்சி, ஸ்ரீபெரும்புதுார், வடசென்னை, திருவள்ளூர் தனி தொகுதிகளை ஒதுக்க, அதிமுக தலைமை முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.