ஸ்விஸ் வங்கியில் திமுகவினருக்கு எவ்வளவு பணம் இருக்கிறது என்று பிரதமர் மோடி கணக்கெடுத்து வருவதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

நாங்குநேரி இடைத்தேர்தலில் பரப்புரையில் இருந்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசும்போது, ’சுவீஸ் வங்கியில் திமுகவினர் எத்தனை பேருக்கு, காங்கிரஸ் கட்சினருக்கு எத்தனை பேருக்கு பணம் இருக்கிறது என்று பிரதமர் மோடி கணக்கெடுத்து வருகிறார். அத்துடன் ஆசியாவில், ஆஸ்திரேலியாவில் யாருக்கு நிலக்கரி சுரங்கள் இருக்கின்றன என்பதையும் மோடி கணக்கெடுத்து வருகிறார். மோடி யாரையும் விடமாட்டார், பதுக்கல்காரர்களை சிறையில் அடைக்கும் பணி தொடங்கிவிட்டது என்று மோடி சொல்லிட்டார்.

மோடியை நேரடியாக எதிர்க்க முடியாமல் அரசுக்கு ஆதரவாய் இருப்பவர்களை தட்டி விடும் வேலையை பார்க்கிறார்கள். மத்தியில் இருக்கும் நல்ல ஆட்சிகளை பகைத்துகொண்டு ஆட்சி நடத்த வேண்டும் என ஸ்டாலின் நினைப்பது, எங்கள் ஆட்சிக்கு இழுக்கு ஏற்படுத்த திட்டமிட்டு நடத்தப்படும் நாடகம்.

ரேசன் கார்டு கேட்டு ஒரு குடும்பம் வந்தாங்க. காலையில் பேசிக்கிடலாம்னு சொல்லிட்டேன். விவாதமெல்லாம் எதுவும் நடக்கவில்லை, கிறிஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் அஇஅதிமுகவுக்கு வாக்களிப்பதை தடுக்க வாக்குகளை பிரிக்க திட்டமிட்டு திமுக நடத்திய நாடகம் இது. பொதுமேடையில் பேசாத ஒரு விஷயத்தை காரை மறித்து பேசிய விஷயத்தை விவாதமாக்கி விட்டார்கள்’ எனத் தெரிவித்தார்.