பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி, வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடாமல் நேரடியாக மாநிலங்களவை மூலம் எம்.பியாகி மத்திய அமைச்சராகிவிட திட்டம்போடப்பட்டது. 

 

பிறகு இதனால் விமர்சனங்கள் உருவாகலாம் என்பதாலும் கட்சியினர் வலியுறுத்தியதாலும் தர்மபுரியில் களமிறங்கி இருக்கிறார். போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொண்டு தர்மபுரி தொகுதியில், தனது மனைவி, சவுமியாவை நிறுத்த முடிவு செய்திருந்தார்.  ஆனால், சவுமியா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. 

அதேபோல், ராஜ்யசபா, எம்.பி., பதவியிலும் தனக்கு விருப்பம் இல்லை என சவுமியா திட்டவட்டமாக கூறிவிட்டாராம். இதனால் அன்புமணி வெற்றிபெற்று விட்டால் ராஜ்யசபா எம்.பியாக யாரை அனுப்புவது என தீவிரமாக ராமதாஸும், அன்புமணியும் யோசனை செய்து வருகிறார்களாம். ஒருவேளை தர்மபுரியில் முடிவு வேறுமாதிரியாக இருந்தால் அன்புமணியே ராஜ்ய சபா எம்.பி ஆகிவிடுவார்.