Asianet News TamilAsianet News Tamil

யார் முட்டாள்..? சென்னைக்காரர்களா..? கோவைக்காரர்களா..? ஊர்சண்டையை இழுந்துவிட்ட அதிமுக- திமுக..!

கோவை அதிமுகவின் கோட்டை என்று அக்கட்சியினரும், சென்னை திமுகவின் கோட்டை என்று இக்கட்சியினரும் கூறி வருகின்றனர். 

Who is stupid ..? AIADMK-DMK has dragged the fray .
Author
Tamil Nadu, First Published May 3, 2021, 12:56 PM IST

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. அதிமுக, பாஜக கூட்டணி இங்கு முழுமையாக வென்றுள்ளது. இதன் மூலம் கோவை அதிமுகவின் கோட்டை என்பது நிரூபணம் ஆகி உள்ளது, கோவை மட்டுமின்றி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதியிலும் அதிமுக பாமக கூட்டணியே வென்றுள்ளது. திமுகவிற்கு ஒரு இடம் கூடகிடைக்கவில்லை. சேலத்திலும் ஒரு தொகுதியில் மட்டுமே திமுக வெற்றி பெற்றுள்ளது. மற்ற அனைத்து தொகுதியிலும் அதிமுக கூட்டணியே வென்றுள்ளது. தொண்டாமுத்தூரில் தங்க வீடு கூட கொடுக்கவில்லை.Who is stupid ..? AIADMK-DMK has dragged the fray .

கடந்த 2016 சட்டசபை தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு முக்கியமான காரணம் கோவை முதல் கிருஷ்ணகிரி வரை உள்ள கொங்கு மண்டலத்தில் அதிக தொகுதிகளில் வென்றது தான் காரணம். அதனால் இந்த முறை எப்படியும் கொங்குமண்டலத்தில் அதிக தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்று திமுக கடுமையாக வேலை செய்தது.

 

கோவை மாவட்டம் ஆனாலும் பெரிய அளவில் திமுகவிற்கு வெற்றி கிடைக்கவில்லை. கொங்கு மண்டலத்தில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக, பாஜக, பாமக கூட்டணியே வென்றுள்ளது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் உள்ள கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், வால்பாறை என 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியே வென்றுள்ளது.  அதேபோல் திமுக கட்சி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே திமுகவின் கோட்டையாக சென்னை இருந்தது. ஆனாலும் பல தேர்தல்களில் படுதோல்வி அடைந்தாலும் கூட சென்னையில் கணிசமான வாக்கு வங்கியை எப்போதும் திமுக தக்க வைத்திருந்தது.

Who is stupid ..? AIADMK-DMK has dragged the fray .

இந்த நிலையில், தமிழக சட்டப் பேரவை தேர்தல் 2021இல் சென்னையில் உள்ள 16 தொகுதிகளையும் திமுக வெற்றிபெற்று மீண்டும் தங்களது கோட்டை சென்னை என்பதை நிரூபித்துள்ளது. சென்னையில் மொத்தம் 16 தொகுதிகள் உள்ளது. கடந்த சட்டப் பேரவை தேர்தலில் சென்னையில் அதிக இடங்களில் திமுகதான் வென்றிருந்தது. 

 

1996ஆம் ஆண்டுக்கு பிறகு, மீண்டும் சென்னையில் உள்ள 16 தொகுதிகளையும் கைப்பற்றி திமுக வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த 16 தொகுதிகளில் வேளச்சேரி தொகுதி மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கப்பட்டிருந்தது. மற்ற 15 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றுள்ளனர். இதனை மையப்படுத்தி கோவை அதிமுகவின் கோட்டை என்று அக்கட்சியினரும், சென்னை திமுகவின் கோட்டை என்று இக்கட்சியினரும் கூறி வருகின்றனர். 

இதனையடுத்து ட்விட்டர் பக்கத்தில்  #முட்டாள்_சென்னையன்ஸ் என அதிமுகவினரும், #முட்டாள்கோவையனுங்க என திமுகவினரும் ஹேஷ்டேக்குகளை உருவாக்கி இந்திய அளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios