தந்தை மகன் கொலையில் முக்கிய சாட்சியமாக விளங்கும் தலைமை காவலர் ரேவதிக்கும் தற்போது பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரேவதி துணிச்சலாக நீதிபதியிடம் சாட்சியளிக்க அவருடைய கணவரும் மகளும் தான் காரணம் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தூத்துக்குடி. சாத்தான்குளத்தில் காவலர்களின் பிடியில் இருந்தபோது உயிரிழந்த தந்தை மகனான, ஜெயராஜ் - பென்னிக்ஸ் விவகாரம் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியிருக்கிறது. இந்த லாக்கப் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாத்தான்குளம் காவல் நிலையத்தில், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸுக்கு என்ன நடந்தது என்பது குறித்து காவல் நிலையத்தோடு தொடர்புடைய பெண் காவலர் ரேவதி அளித்துள்ள சாட்சியத்தால், வழக்கு விசாரணையில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.


 
இந்நிலையில் காவலர் ரேவதியின் கணவர், “அன்று என்ன நடந்தது என்பது குறித்து எனது மனைவி என்னிடம் சொன்னார். அப்போது இது குறித்து உன்னிடம் கேட்கப்பட்டால், உண்மையைச் சொல் எனத் தெரிவித்தேன். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றன. என் பெரிய பிள்ளையும், உண்மையையே சொல்லும்படி என் மனைவியிடம் வலியுறுத்தினாள். இதைத் தொடர்ந்துதான் நடந்தது குறித்து சாட்சியம் அளிக்கப்பட்டது. சாத்தான்குளம் சம்பவம் குறித்து எங்கு வேண்டுமானாலும் வந்து சாட்சியம் கொடுக்க என் மனைவி தயாராக இருக்கிறார். ஆனால், அவருக்கும் என் குடும்பத்திற்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். இதுவரை அரசு தரப்பிலிருந்து எங்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளப்பட்டு பேசப்பட்டதே தவிர, பாதுகாப்புக்கு என்று யாரும் அமர்த்தப்படவில்லை. உடனடியாக எங்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும்,” என வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார். 

சிபிசிஐடி போலீசார் மேற்க்கொண்ட விசாரணை அறிக்கை  உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நீதிபதிகள்  சிபிசிஐடி போலீசாரை பாராட்டியதோடு தலைமைக்காவலர் ரேவதியிடம் பேசி வாக்குமூலம் பெற்றதாக தெரிகிறது. நீதிபதிகள் சிபிசிஐடி டீம் கொடுத்த பூஸட் ரேவதிக்கு மேலும்  துணிச்சலைக்கொடுத்திருக்கிறது.

இந்த நிலையில் இன்று தென்மண்டல ஐஐியாக பதியேற்றுள்ள முருகன் செய்தியாளர்கள் மத்தியில் பேசும் போது.  “பெண் காவலர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பைக் கொடுத்துள்ளோம். அவருக்கு ஒரு மாதம் ஊதியம் கொடுத்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.