Asianet News TamilAsianet News Tamil

இன்று கிளைமாக்ஸ்... மீண்டும் மோடி ஆட்சியா... எதிர்க்கட்சிகள் ஆட்சியைப் பிடிக்குமா?

300-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைப்போம் என்ற நம்பிக்கையில் பாஜக உள்ளது. எதிர்க்கட்சியினர் அதிக இடங்களில் வென்று கூட்டணி அரசு அமையும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
 

who is next pm of india?
Author
Chennai, First Published May 23, 2019, 6:50 AM IST

நாடு முழுவதும் 542 நாடாளுமன்றத் தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி தொடருமா அல்லது புதிய அரசு அமையுமா என்ற கேள்விக்கு இன்று விடை தெரிய உள்ளது.who is next pm of india?
 நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்தலில் 67.1 சதவீத வாக்குகள் பதிவாயின. இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் மிகவும் அதிகபட்சமாக பதிவான வாக்குகள் இதுதான். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்படுகின்றன.

 who is next pm of india?
முதலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. மேலும் விவிபாட் இயந்திரத்தில் பதிவான ஒப்புகைச் சீட்டுகள் பின்னர் எண்ணப்பட உள்ளன. காலை 10 மணி முதல் முதற்கட்ட முன்னணி நிலவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிற்பகலில் எந்தக் கட்சி அல்லது எந்தக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்ற நிலவரம் தெரிந்துவிடும்.who is next pm of india?
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக கூட்டணியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைப்போம் என்ற நம்பிக்கையில் பாஜக உள்ளது. எதிர்க்கட்சியினர் அதிக இடங்களில் வென்று கூட்டணி அரசு அமையும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
இதில் யாருடைய எதிர்பார்ப்பு நிறைவேறப்போகிறது,  தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நிஜமாகுமா பொய்யாகுமா என்பதெல்லாம் பிற்பகலில்  தெரிந்துவிடும்.

Follow Us:
Download App:
  • android
  • ios