என்னைவிட சிறப்பாக யாராலும் அரசியல் செய்துவிட முடியாது என்றும் இனி என்னை யாராலும் மிரட்ட முடியாது என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். உலகநாயகன் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் கட்சி ஆரம்பித்து அரசியல் தலைவராக வலம் வருகிறார்.
என்னைவிட சிறப்பாக யாராலும் அரசியல் செய்துவிட முடியாது என்றும் இனி என்னை யாராலும் மிரட்ட முடியாது என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
உலகநாயகன் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் கட்சி ஆரம்பித்து அரசியல் தலைவராக வலம் வருகிறார். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அவரால் அரசியலில் சோபிக்க முடியவில்லை, ஆனாலும் தொடர்ந்து அரசியல் ஆற்றி வருகிறார் கமல், இதற்கிடையில் விக்ரம் என்ற படத்தை தயாரித்து அப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றுள்ளது. இது நடிகர் கமல்ஹாசனுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பில் kamals blood commune என்ற பெயரில் கமல் ரத்த வங்கி துவக்க விழா நேற்று ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய கமல்ஹாசன் சிறையில் இருந்தால் தான் தலைவன் என்று இல்லை திரையில் இருந்தாலும் தலைவன் தான் என்றார். தொடர்ந்து எனது படத்தில் சமூக சிந்தனைகள் வந்துகொண்டே இருக்கும், நம்மவர் என்பது நான் மட்டுமல்ல நீங்களும் தான் என்றார். ஒன்றியம் என்றால் எங்களைத்தான் சொல்கிறார்கள் நான் அனைத்தையும் தான் சொல்கிறேன் என்றார். ரத்தம் கொடுத்து உதவும்போது சாதி மத பேதம் மறைந்துவிடும் அண்ணன் தம்பி உறவு தலைக்கும் என்றார்.

ஒரு ஏழையை பணக்காரனாக மாற்றுவது அரசியல் அல்ல, ஏழைகளே இல்லாமல் ஆக்குவதுதான் அரசியல் என்றார். என்னைவிட அரசியலை சிறப்பாக தமிழகத்தில் யாராலும் செய்து விடமுடியாது, அவர்களிடம் மேடை மட்டுமே உள்ளது. என்னிடம் தான் தொழில் நுட்பம் இருக்கிறது, செலவு செய்யும் பணத்தை எல்லாம் வருமானத்துறைக்கு தெரிந்துதான் செய்கிறேன். இனி யாராலும் மிரட்ட முடியாது. அரசியல் பேச்சுக்கள் காரமாக உள்ளது என்று வேண்டுமானாலும் என்னை மிரட்டலாம், நேர்மை எப்போதும் விலை உயர்ந்ததுழ அப்படி ஒருமுறை இருந்து பாருங்கள் பிறகு அதுவே பழகிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.
