Who is going to lead the country as president is that it has come to light says thirumavalavan
ஜனாதிபதியாக நாட்டை யார் வழிநடத்த போகிறார்கள் என்பது வெங்கையா அறிவிப்பால் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும், ஒப்புக்கு குடியரசு தலைவர் வேட்பாளர் உண்மைக்கு வெங்கையா என்பது தெரிய வந்துள்ளதாகவும் விடுதலை சிறுத்தை கட்சியின் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் குடியரசு தலைவர் பதவிக்கு பாஜக வேட்பாளராக தலீத் சமூகத்தை சேர்ந்தவரும் பீகார் முதல்வராகவும் இருந்த ராம்நாத் கோவிந்தை அமித்ஷா அறிவித்தார்.
அப்போது ராம்நாத் கோவிந்த் தலீத் சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளர் என திருமாவளவன் குற்றம் சாட்டியிருந்தார்.
இதைதொடர்ந்து துணை குடியரசு தலைவருக்கான பாஜக வேட்பாளராக வெங்கையா நாயுடுவை அமித்ஷா அறிவித்துள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் ஜனாதிபதியாக நாட்டை யார் வழிநடத்த போகிறார்கள் என்பது வெங்கையா அறிவிப்பால் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.
ஒப்புக்கு குடியரசு தலைவர் வேட்பாளர் உண்மைக்கு வெங்கையா என்பது அறிவிப்பில் அறிய வருவதாக குறிப்பிட்டார்.
பல இடங்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் ஊராட்சி மன்ற தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்படுவது உண்டு எனவும், ஆனால் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தான் நிர்வாகத்தை நடத்துவார் எனவும் சுட்டி காட்டினார்.
என்ன ராஜதந்திரத்தை கையாளுகிறார்கள் என்பதை வெங்கையா நாயுடு அறிவிப்பு சான்றாக உள்ளது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
