‘ரஜினி ஏன் உண்மையை மறைத்தார் என்று தெரியவில்லை’ என்ற தலைப்பில் எழுதியுள்ளார். அதில், “ஒருவர் முரசொலி வைத்திருந்தால் திமுககாரர் என்று சொல்லிவிடலாம், துக்ளக் வைத்திருந்தால் ’அறிவாளி’ என்று சொல்லிவிடலாம்’’ என்றார். அப்படி அவர் சொன்ன போது அந்த கூட்டத்தில் இருந்த இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்ளிட்ட ஏராளமான பாஜக தலைவர்கள் நிர்வாகிகள்,தொண்டர்கள் அக்கட்சியின் அனுதாபிகள், சைதை துரைசாமி உள்ளிட்ட அதிமுகவினர் சுமார் இரண்டு நிமிடங்கள் கைதட்டி ஆர்ப்பரித்தார்கள்!
துக்ளக் வாசிப்பவர்கள் யார் என்பதற்கு ரஜினி கண்முன்னே இருந்தவர்களே சாட்சி! அப்படியானால், பாஜக, அதிமுக மற்றும் அதன் ஆதரவாளர்களைத்தான் அவர் அறிவாளிகளாக கருதுகிறார் என்று நாம் புரிந்து கொள்ளலாம் என்று பத்திரிகையாளர் சாவித்ரி கண்ணன் விமர்சனம் செய்துள்ளார்.

‘துக்ளக்’ பொன் விழாவில் விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “பத்திரிக்கைத் துறையை ஆயுதமாக கையில் எடுத்தவர் சோ. 1971-ல் ஈரோட்டில் பெரியார் ராமர் படத்திற்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலம் நடத்தினார். அதை தமிழ்நாட்டு பத்திரிக்கைகள் செய்தியாகக்கூட போடவில்லை. ஆனால், தைரியமாக ‘துக்ளக்’ பத்திரிகையில் அட்டைப் படத்தில் அச்சிட்டு கடுமையாக விமர்சித்து சோ எழுதினார்.
பொதுவாக முரசொலி கையில் வைத்திருந்தால் திமுககாரர் என்பார்கள்; அதேபோல துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள். ஊடகங்கள் எப்போதும் பாலையும், நீரையும் பிரிப்பது போன்று உண்மையையும், பொய்யையும் பிரிக்க வேண்டும். பால் போன்று இருக்கும் உண்மையான செய்தியில் பொய் என்னும் தண்ணீரை கலந்துவிடக் கூடாது. சோவை போலவே துக்ளக் இதழை தற்போது குருமூர்த்தி நன்றாக வழிநடத்தி கொண்டு செல்கிறார்.” என்று பேசினார்.
ரஜினியின் இந்தப் பேச்சு பற்றி பத்திரிகையாளரும் ‘துக்ளக்’ முன்னள் பணியாளருமான சாவித்ரி கண்ணன் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில், ‘ரஜினி ஏன் உண்மையை மறைத்தார் என்று தெரியவில்லை’ என்ற தலைப்பில் எழுதியுள்ளார். அதில், “ஒருவர் முரசொலி வைத்திருந்தால் திமுககாரர் என்று சொல்லிவிடலாம், துக்ளக் வைத்திருந்தால் ’அறிவாளி’ என்று சொல்லிவிடலாம்’’ என்றார். அப்படி அவர் சொன்ன போது அந்த கூட்டத்தில் இருந்த இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்ளிட்ட ஏராளமான பாஜக தலைவர்கள் நிர்வாகிகள்,தொண்டர்கள் அக்கட்சியின் அனுதாபிகள், சைதை துரைசாமி உள்ளிட்ட அதிமுகவினர் சுமார் இரண்டு நிமிடங்கள் கைதட்டி ஆர்ப்பரித்தார்கள்!


நான்காண்டுகளுக்கு முன்னால் நடந்த துக்ளக் ஆண்டுவிழாவில், ஒரு வாசகர், ஆசிரியர் சோவிடம், ’’சார், முன்பெல்லாம் துக்ளக் கொஞ்சமாவது பேலன்ஸாக இருந்தது. இப்போதோ, அது ’நமது எம்ஜிஆர்’ போல மாறிவிட்டது...’’ என்றார். அதைக் கேட்ட சோ ,சிரித்துக் கொண்டார்.மறுக்கவில்லை! அந்த சம்பவம் தான் என் நினைவுக்கு வந்தது!” என்று விமர்சித்துள்ளார்.
