who is a next president of india candidate in make opposite team members selected
ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை தேர்ந்தெடுக்க பாஜகவை சேர்ந்து எதிர்கட்சிகள் சார்பில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் நிறைவடைகிறது. இந்நிலையில் அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.
இதுகுறித்து யாரை வேட்பாளராக அமைக்கலாம் என காங்கிரஸ் தரப்பில் குழு ஒன்றை அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ளார்.
இதனிடையே குடியரசு தலைவருக்கான வேட்பு மனுதாக்கல் ஜூன் 14 ஆம் தேதி தொடகுவதாகவும், ஜூலை 17 ஆம் தேதி குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறும் எனவும் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்துள்ளார்.
மேலும், ஜூலை 20 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ள்ளார்.
இதைதொடர்ந்து குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்ய 3 பேர் கொண்ட குழுவை பாஜக அமைத்துள்ள்ளது. இந்த குழுவில் அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு, ராஜ்நாத்சிங் ஆகியோரை நியமித்து பாஜக தலைவர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை தேர்ந்தெடுக்க பாஜகவை சேர்ந்து எதிர்கட்சிகள் சார்பில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
குலாம் நபி ஆசாத், தலைமையில் குடியரசு தலைவருக்கான வேட்பாளரை தேர்வு செய்வதற்கான குழுவில், திமுக, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் பிரதிகள் உள்ளனர்.
இதில், காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூனா கார்கே, தமிழகத்தில் இருந்து திமுக சார்பில் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளார்.
