Asianet News TamilAsianet News Tamil

மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் யார் அமைச்சர்கள்..? புதிய எம்.எல்.ஏ.க்களில் யாருக்கு லக் அடிக்கப்போகுது.?

மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் யார் யார் அமைச்சர்களாக நியமிக்கப்படப்போகிறார்கள் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.   
 

Who are the ministers in Stalin's cabinet? Who among the new MLAs is going to get lucky?
Author
Chennai, First Published May 4, 2021, 8:54 PM IST

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக மட்டும் தனித்து 125 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனி பெரும்பான்மையுடன் வென்று ஆட்சி அமைக்க உள்ளது. வரும் 7-ஆம் தேதி முதல்வராக ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். 32 பேர் வரை அமைச்சரவையில் இடம் பெற முடியும். தற்போது யாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தனது அமைச்சரவையில் கட்சியின் மூத்த தலைவர்கள், இளைஞர்கள், பெண்கள், சிறுபான்மையினர், பிற சமூகத்தினரும் இடம் பெறும் வகையில் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரதிநிதித்துவம் இருக்கும் வகையில் அமைக்க மு.க. ஸ்டாலின் அமைக்க விரும்புவதாகக் கூறப்படுகிறது.Who are the ministers in Stalin's cabinet? Who among the new MLAs is going to get lucky?
கடந்த 2006-ஆம் ஆண்டில் கருணாநிதி அமைச்சரவையில் இடம் பிடித்த துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, தா.மோ.அன்பரசன், சாமிநாதன், எம்ஆர்கே பன்னீர்செல்வம், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், தமிழரசி, க.ராமச்சந்திரன், கு.பிச்சாண்டி ஆகியோர் இந்தச் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். எனவே, இவர்களில் யாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலோனர் அமைச்சர்கள் ஆவார்கள் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Who are the ministers in Stalin's cabinet? Who among the new MLAs is going to get lucky?
இவர்களைத் தவிர முத்துசாமி, செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன், பி.கே.சேகர்பாபு, ராஜ கண்ணப்பன், எஸ்.ரகுபதி ஆகியோரில் சிலரும் அமைச்சர்கள் ஆகும் வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. மகேஷ் பொய்யாமொழி, டாக்டர் நா.எழிலன், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மா.சுப்பிரமணியன்,  எஸ்.எஸ். சிவசங்கர், டி.ஆர்.பி.ராஜா, அப்துல் வகாப் பாளையங்கோட்டை போன்றவர்களின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பேரவைத் தலைவராக சக்கரபாணியின் பெயர் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios