நாடு முழுவதும் 17 ஆவது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி மே மாதம்19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான புரச்சாரம் சூடுபிடித்துள்ளது. வட மாநிலங்களில் பாஜக பெரிய அளவில் செல்வாக்கு பெற்றிருக்கும் நிலையில் தென் மாநிலங்களில் கர்நாடகாவில் மட்டுமே பாஜக ஓரளவுக்கு செல்வாக்கு பெற்றுள்ளது.

கர்நாடகாவைப் பொறுத்தவரை பாஜகவை காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற காங்கிரஸ் கட்சிகள் இணைந்து எதிர்த்து வருகின்றன. இந்நிலையில் அந்த மாநிலத்தில் அனைத்துக் கட்சியினரும் பிரமிக்கும் வகையில் முக்கிய வேட்பாளராக களம் இறங்கியிருப்பவர் நடிகர் பிரகாஷ் ராஜ்.

கர்நாடகாவில் மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. அங்கு இரண்டு கட்டங்களாக  தேர்தல் நடக்க உள்ளது. முதற்கட்டமாக ஏப்ரல் 18 தேர்தல் நடக்கிறது. இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது..

நடிகர் பிரகாஷ்ராஜ், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போகிறேன். மக்களின் ஆட்சி இனி அமையும் ''ஆப்கி பார் ஜனதா சர்க்கார்''. நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பேன், என்று குறிப்பிட்டு சென்று ஆண்டு முதல் சொல்லிக்கொண்டே  இருந்தார். இந்த நிலையில் அவர் மத்திய பெங்களூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார்


இதையடுத்து கடந்த வாரம் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். . சமூக செயற்பாட்டாளர்கள், ஆம் ஆத்மி கட்சியினர் இவர் வேட்புமனு தாக்கல் செய்யும் போது ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜூக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய பெங்களூரு மக்களவை தொகுதி மக்கள் எனக்கு ஆதரவு அளிப்பார்கள். சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்வேன். இந்த சின்னம் தனக்கு கிடைத்து இருப்பது பெரிய மகிழ்ச்சி அளிப்பதாக பிரகாஷ்ராஜ் குறிப்பிட்டு இருக்கிறார்.