ஜெயலிதாவை வெளிநாடு அழைத்துச் செல்ல எது தடையாக இருந்தது என ஓ. பன்னீர்செல்வத்திடம் ஆறுமுகசாமி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட 35 ஆவது நாட்களில், அறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆரைப்போல ஜெயலலிதாவையும் வெளிநாடு அழைத்துச் செல்லலாம் என அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேலுமணி ஆகியோரிடம் கூறினேன்,
எம்ஜிஆரை போல ஜெயலலிதாவையும் வெளிநாட்டிற்கு அழைத்து செல்லலாம் என அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேலுமணி ஆகியோரிடம் கூறினேன் ஆனால் அவர்கள் அப்போலோ மருத்துவர்களிடம் பேசி பிறகு முடிவு எடுக்கலாம் என கூறினார்கள் என ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல தடையாக இருந்தது யார் என ஆறுமுகசாமி எழுப்பிய கேள்விக்கு ஓ. பன்னீர்செல்வம் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
ஜெயலலிதா மரணத்தில் அவிழ்க்கப்படாத பல முடிச்சுகள் இன்னும் உள்ளது. அதை விசாரிப்பதற்கு தான் ஆறுமுகசாமி கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை மேல் விசாரணை நடந்து வருகிறது. இதுவரை 154 பேரிடம் அந்த ஆணையம் விசாரணையை முடித்துள்ளது. அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் உரிய மருத்துவ குழுவினரை வைத்து விசாரணை நடத்தப்படவில்லை என குற்றச்சாட்டு வைத்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் மருத்துவ குழுவை ஏற்படுத்தி விசாரிக்கலாம் என நீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது. ஆணையத்திற்கு உதவியாக எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோர் ஆணையத்தில் ஆஜராகினர்.

இளவரசியிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், போயஸ் தோட்ட இல்லத்தில் ஜெயலிதா உடன் தான் இருந்தபோதும் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து தன்னிடம் அவர்கள் பகிர்ந்து கொண்டதில்லை என்றும், குடும்பம் மற்றும் உறவினர்கள் பற்றி மட்டுமே அவர் பேசுவார் என்றும் கூறினார். 1992 ஆம் ஆண்டு சசிகலா மூலம் ஜெயலலிதாவுக்கு தான் அறிமுகமானதாகவும் அவர் தெரிவித்தார். ஜெயலலிதா அவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த போது ஓரிரு முறை மட்டுமே தான் அவரை கண்ணாடி வழியாக பார்த்ததாகவும், அவர் சிகிச்சையில் இருந்த 74 நாட்களும் சசிகலாவே உடன் இருந்து கவனித்துக் கொண்டார் என்றும் கூறினார். அவரிடம் விசாரணை நடந்து முடிந்தபின்னர்,ஓ பன்னீர்செல்வத்திடம் விசாரணை தொடங்கியது. அப்போது அவரை நோக்கி பல்வேறு கேள்விகள் முன் வைக்கப்பட்டது. பெரும்பாலான கேள்விகளுக்கு தனக்கு தெரியாது என்று அவர் பதிலளித்தார்.

குறிப்பாக ஜெயலலிதாவுக்கு என்ன மாதிரியான சிகிச்சைகள் வழங்கப்பட்டது. அவர் ஏதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் போன்ற விஷயங்கள் தனக்கு தெரியாது என்றும், அவர் அவர் சிகிச்சையில் இருந்தபோதே அவரின் உடல் நலன் குறித்து அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கரிடமே தான் கேட்டு தெரிந்து கொண்டதாகவும், காவிரி ஆணையம் தொடர்பான கூட்டம் ஜெயலலிதா தலைமையில் மருத்துமனையில் நடைபெற்றதாகவும், அது தொடர்பாக அறிக்கை வெளிவந்த பிறகே அது குறித்து தனக்கு தெரியவந்தது என்றும், அது தொடர்பாக அப்போதைய தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன்ராவிடம் தான் கேட்டபோது, மேடம் தனக்கு டிக்கெட் செய்ததாக அவர் கூறியதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ஜெயலிதாவை வெளிநாடு அழைத்துச் செல்ல எது தடையாக இருந்தது என ஓ. பன்னீர்செல்வத்திடம் ஆறுமுகசாமி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட 35 ஆவது நாட்களில், அறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆரைப்போல ஜெயலலிதாவையும் வெளிநாடு அழைத்துச் செல்லலாம் என அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேலுமணி ஆகியோரிடம் கூறினேன், அப்போது அவர்கள் அப்பல்லோ மருத்துவர்களிடம் கலந்து பேசிய பிறகு வெளிநாடு அழைத்துச் செல்வது குறித்து முடிவெடுக்கலாம் என விஜயபாஸ்கர் சொன்னதாக ஓ பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்தார். அதேபோல் மறுநாள் காலை அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டி, மருமகன் விஜயகுமார் ரெட்டியை சந்தித்து இதே கருத்தை வலியுறுத்தியதாகவும் ஜெயலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும், ஒரு வாரத்தில் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என விஜயகுமார் ரெட்டி கூறியதாகவும் பன்னீர்செல்வம் ஆணையத்திடம் கூறினார்.

ஏற்கனவே ஆணையத்தில் ஆஜரான ராம மோகன் ராவ் வெளிநாடு அழைத்துச் செல்வது குறித்து அமைச்சரவை கூட்ட சொன்னதாகவும் நான்கு நாட்கள் பரபரப்பாக பேசி விட்டு பின்னர் அமைதியாக பிரிந்து விட்டனர் என அவர் கூறி என்பதை மேற்கோள்காட்டி ஆறுமுகசாமி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பன்னீர்செல்வம் ராம மோகன் ராவ் தன்னிடம் அது குறித்து எதுவும் பேசவில்லை எனவும் அவ்வாறு கேட்டிருந்தால் உடனே கையெழுத்துப் போட்டு இருப்பேன் என்றும் பதிலளித்தார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் ஆகியோர்தான் எய்ம்ஸ் மருத்துவர்களை வரவழைத்தார்கள் என பன்னீர்செல்வம் வாக்குமூலத்தில் கூறினார்.
கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு தனக்கு தெரியாது என பதில் கூறி வந்த ஓபிஎஸ், ஜெயலலிதாவை வெளிநாட்டு அழைத்துச் செல்லத் தடையாக இருந்தது யார் என்ற கேள்விக்கு மட்டும், அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எஸ். பி வேலுமணி ஆகியோரிடம் வெளிநாடு அழைத்து செல் லாம் என தான் கூறியதாக தெரிவித்திருப்பது அடுத்தடுத்த விசாரணையில் சி.விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி போன்றோரையும் ஆணையம் விசாரணைக்கு அழைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
