உங்ககூட நாங்க இருந்தா எங்க சோலி மொத்தமா முடிஞ்சிடும்... அமமுகவுக்கு முன்பே முந்திக் கொண்ட முக்கிய கட்சி..!
பலம் வாய்ந்த கூட்டணியின் நிலையோ இப்படி இருக்கும்போது பட்டி, டிங்கரிங்கே பார்க்கக்கூட முடியாயத படுபயங்கரமாக அடிவாங்கிக் கிடக்கும் கட்சிகளின் நிலைமையை கேட்கவா வேண்டும்..?
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அமமுகவுடன் தேமுதிக, எஸ்டிபிஐ, சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால், அத்தனை இடங்களிலும் அடித்து துவம்சம் செய்யப்பட்ட தோல்வியை தழுவியது இந்தக் கூட்டணி. இப்போது நடப்பது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல். இங்கு கட்சிவலுவாக இருப்பது ஒருசாரருக்கே கைகொடுக்கும். ஆனால் உள்ளாட்சி தேர்தலில் உள்ளூரில் பலம் வாய்ந்தவரே பதவிக்கு வர முடியும். ஆகையால் தான் இந்த தேர்தலில் பல கட்சிகள் கூட்டணியை விரும்புவதில்லை. பலம் வாய்ந்த கூட்டணியின் நிலையோ இப்படி இருக்கும்போது பட்டி, டிங்கரிங்கே பார்க்கக்கூட முடியாயத படுபயங்கரமாக அடிவாங்கிக் கிடக்கும் கட்சிகளின் நிலைமையை கேட்கவா வேண்டும்..? அந்த வகையில்தான் அமமுக கூட்டணியை முறித்துக் கொண்டு தாமாக வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறது எஸ்டிபிஐ கட்சி.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என தமிழ்நாட்டிலுள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், ஒரே கட்டமாக பிப்ரவரி 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 30 ஆயிரத்து 29 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சியில் மட்டும் 5794 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையர் பழனி குமார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் குறித்த கழக மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக்கழக அலுவலகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அமமுக தனித்து போட்டி என்று அறிவித்துள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன். கொரோனா பரவல் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒரு மாதம் தள்ளி வைத்திருக்கலாம்.
நயினார் நாகேந்திரன் பேசியது தேவையில்லாத வார்த்தை. எப்படி பேசினார் என தெரியவில்லை; அதிமுக தைரியமாக இல்லை என்பது உண்மை தான்'’ எனத் தெரிவித்துள்ளார். ஆனால், டி.டி.வி.தினகரன் தனித்துப்போட்டி என அறிவிப்பத்தற்கு முன்பே எஸ்டிபிஐ கட்சி தனது வேட்பாளர்களை அறிவித்து தனித்துப்போட்டியிடப்போவதாக அறிவித்து விட்டது.