Asianet News TamilAsianet News Tamil

நாளை குடிமகன்களுக்கு விடுதலை குடும்பத் தலைவியின் தாலியும், தட்டுமுட்டு சமான்களும் எங்கே போகும்? பாமக கேள்வி

கொரோனா அரக்கன் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது. மது அரக்கனும் களத்தில் குதித்து வீதிகளுக்கு வந்து சதிராட்டம் ஆடத் தொடங்கினால் அனைத்து தரப்பு மக்களின் நிலை என்னவாகும்? கொரோனாவிடமிருந்து அவர்களை யாரால் காப்பற்ற முடியும்.?

Where will the talisman of the family head and the luggage of tomorrow's citizens go? Dear question
Author
Tamilnadu, First Published May 6, 2020, 4:50 PM IST

T.Balamurukan

தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட இருக்கிறது. ஒரு பாட்டிலுக்கு ரூ 10 முதல் ரூ20 வரைக்கும் விலை ஏற்றதுடன் விற்பனையாக இருக்கிறது. இதற்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளான திமுக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் நாளை, 'பொதுமக்கள் தங்களது வீடுகளில் 'கருப்பு பேட்ச்' அணிந்து கொண்டு கண்டனம் தெரிவிக்க வேண்டும்' என்று ஆதரவு திரட்டி வருகிறார். ஊரடங்கு இன்னும் முடிவுக்கு வராத நிலையில் மதுக்கடைகளை  திறக்க அதிமுக அரசு தீவிரம் காட்டியிருக்கிறது. மத்திய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை முழுமையாக வழங்காததைக் கண்டித்தும் நாளை போராட்டம் நடைபெற இருக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மதுக்கடைகள் திறக்கப்பட்டால் வீடுகளில் உள்ள மக்களின் கவனம் மது விற்கும் சாலைகளை நோக்கித் திரும்பும் என்பதால் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை திறக்க கேரளம் தடை விதித்திருக்கிறது. கொரோனாவை கிட்டத்தட்ட ஒழித்துவிட்ட கேரளமே கட்டுப்பாடு காக்கும் போது தமிழகத்தில் இவ்வளவு அவசரம் தேவையா?

 

— Dr S RAMADOSS (@drramadoss) May 6, 2020

 

Where will the talisman of the family head and the luggage of tomorrow's citizens go? Dear question

மதுக்கடைகள் திறக்கப்பட்டால் வீடுகளில் உள்ள மக்களின் கவனம் மது விற்கும் சாலைகளை நோக்கி திரும்பும் என்பதால் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை திறக்க கேரளம் தடை விதித்திருக்கிறது.கொரோனாவை கிட்டத்தட்ட ஒழித்துவிட்ட கேரளமே கட்டுப்பாடு காக்கும் போது தமிழகத்தில் இவ்வளவு அவசரம் தேவையா? தமிழ்நாட்டில் ஏற்கனவே கொரோனா அரக்கன் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது. மது அரக்கனும் களத்தில் குதித்து வீதிகளுக்கு வந்து சதிராட்டம் ஆடத் தொடங்கினால் அனைத்து தரப்பு மக்களின் நிலை என்னவாகும்? கொரோனாவிடமிருந்து அவர்களை யாரால் காப்பற்ற முடியும்.? வராக் கணக்கில் வறுமையின் உச்சத்தை தொட்டு வந்த நிலையில் தெருவுக்குத் தெரு மதுக்கடைகளை திறந்தால் ஏழைக் குடும்பங்களின் நிலை என்ன ஆகும்? குடும்பத் தலைவியின் தாலியும், தட்டுமுட்டு சமான்களும் எங்கே போகும்? என்று டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios