Asianet News TamilAsianet News Tamil

ஓ.பி.எஸ் எங்க சொந்தக்காரருங்க... பெயரை பயன்படுத்தி நடந்த மோசடி..!

முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பி,எஸ் பெயரை பயன்படுத்தி  47 லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 

Where to own OPS ... Fraud using name ..
Author
Tamil Nadu, First Published Oct 8, 2021, 3:01 PM IST

முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பி,எஸ் பெயரை பயன்படுத்தி  47 லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 
 
கேரளா,  இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் பிரவீன். இவர் கடந்த 2019ஆம் ஆண்டில் இடுக்கியில் ஏலக்காய் ஸ்டேட் வாங்க திட்டமிட்டு இருந்தார்.  இது குறித்து தகவல் அறிந்த கேரளாவை சேர்ந்த பாபு, மகேஷ் ஆகிய இருவரும் தென்காசியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., மகன் என்று கூறி முருகேசன் என்பவரை அறிமுகப்படுத்தி உள்ளார். Where to own OPS ... Fraud using name ..

முருகேசன், குறைந்த வட்டியில் ரூ.10 கோடி ரூபாய் பணம் பெற்று தருவதாக பிரவீனிடம் கூறியுள்ளார்.  இந்நிலையில் பாபு, மகேஷ், முருகேசன் ஆகிய மூவரும் மதுரை அருகே சேடப்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரை ப்ரவீனிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளனர். முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் நெருங்கிய உறவினர் என்றும், சேடப்பட்டி கூட்டுறவு வங்கி தலைவர் என்றும் பிரவினிடம் ராஜேந்திரன் தன்னை அறிமுகம் செய்ததாக கூறப்படுகிறது.Where to own OPS ... Fraud using name ..

இதனை அடுத்து, அவர் பிரவீனிடம் ஆவண செலவு மற்றும் கமிஷன் என ரூ.47 லட்சம் ரூபாய் பணத்தை முத்திரைத் தாளில் கையெழுத்திட்டு அவர்கள் வாங்கியதாக தெரிகிறது. ஆனால், பணத்தை தராமல் தொடர்ந்து அவர்கள் இழுத்தடித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பிரவீன், ஓபிஎஸ் பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் குடும்பத்துடன் புகார் அளித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios