where the places income tax rain going on today
சசிகலா, தினகரன், சசிகலாவின் கணவர் நடராஜன், சகோதரர் திவாகரன், இளவரசியின் மகன் விவேக் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்கள், எஸ்டேட்டுகள் உள்ளிட்ட 187 இடங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜெயா தொலைக்காட்சி, சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் உறவினர்கள் உள்ளிட்ட வீடுகள், அலுவலகளில் நேற்று தொடங்கிய சோதனை இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது.

எந்தெந்த இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறித்து பார்க்கலாம்.
1. ஜெயா தொலைக்காட்சி
2. நமது எம்.ஜி.ஆர். பத்திரிக்கை அலுவலகம்
3. ஜெயா தொலைக்காட்சி சிஇஓ விவேக்கின் அலுவலகம் மற்றும் வீடு
4. ஜாஸ் சினிமாஸ்
5. இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியாவின் இல்லம்.
6. மிடாஸ் மது பான தொழிற்சாலை
7. புதுச்சேரியில் உள்ள டி.டி.வி.தினகரனின் பண்ணைவீடு
8. மன்னார்குடியில் உள்ள டி.டி.வி.தினகரன் வீடு
9. சசிகலாவின் சகோதரர் திவாகரன் வீடு மற்றும் கல்லூரி
10.திருச்சியில் உள்ள கலியபெருமாள் வீடு
11.சசிகலாவின் உறவினர் மறைந்த மகாதேவன் வீடு
12.தஞ்சையில் உள்ள டாக்டர் வெங்கடேசன் உள்ளிட்ட 7 இடங்கள்
13.மறைந்த ஜெயலலிதா ஓய்வெடுக்கும் கோடநாடு எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று 2 ஆவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

நேற்று முதல் நடைபெற்று வரும் இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் பல கிடைத்து உள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூடுதல் ஆதாரம் இருப்பதாகக் கருதப்படும் இடங்களிலும், ஆவணங்கள் சிக்காத இடங்களிலும் சோதனையை தொடர்ந்து நடைபெறும் என்றும், முழு அளவில் சோதனை முடிந்த பிறகுதான், கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்களைப் பற்றிய தகவலை தெரிவிக்க முடியும் என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
