Asianet News TamilAsianet News Tamil

ஏங்க தாசில்தாரம்மா அந்த ஜெராக்ஸ் மெஷினு எங்கூட்டு இருக்குது? ஒரு காப்பி எடுக்க எம்பூட்டு வில?

*    மிக தெளிவாக திட்டம் போட்டு எனக்கு எதிராக பல காரியங்கள் பெருந்துறை தொகுதிக்குள் நிகழ்த்தப்படுகிறது. என்னை அசிங்கப்படுத்திட பார்க்கிறாங்க:    அமைச்சர் கருப்பணன். 
 

where is the village officer, and show that xerox mechine
Author
Chennai, First Published Apr 26, 2019, 7:32 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

ஏங்க தாசில்தாரம்மா அந்த ஜெராக்ஸ் மெஷினு எங்கூட்டு இருக்குது? ஒரு காப்பி எடுக்க எம்பூட்டு வில?

*    மிக தெளிவாக திட்டம் போட்டு எனக்கு எதிராக பல காரியங்கள் பெருந்துறை தொகுதிக்குள் நிகழ்த்தப்படுகிறது. என்னை அசிங்கப்படுத்திட பார்க்கிறாங்க:    அமைச்சர் கருப்பணன். 
(தலைவரே, உங்களை அசிங்கப்படுத்துறதுக்குன்னு தனியா ஒருத்தர் வெளியில இருந்து வரணுமா? நொய்யல் நதியின் நுரையெல்லாம் கோயமுத்தூர்காரங்க குளிக்குறப்ப போட்ட சோப்பு நுரைன்னு சொன்னீங்களே...அந்த ஒண்ணு போதாதா?)

*    கேரளாவில் மோடி மற்றும் பினராயி விஜயன் மீதான எதிர்ப்பு அலையால்தான் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது: ஏ.கே.அந்தோணி. 
(க்கும், ஏட்டா, இவிடெ தமிழ்நாட்டிலே நிங்களோட காங்கிரஸும், பின்னே பினராயின்டே மார்க்சிஸ்டும் இணைஞ்சு பி.ஜே.பி.யை எதிர்க்குதே. பச்சே அவிடெ நீங்கள் இங்ஙனம் பறையுது. கொழப்பம் செய்யண்டா ஆண்டனியேட்டா கொழம்ப வேண்டா)

*    தமிழகத்தில் தற்போது நிலவும் மிக முக்கிய் பிரச்னைகளுக்கு தி.மு.க.தான் ஒரே காரணம்: அன்புமணி. 
(அண்ணே, எலெக்‌ஷன் முடிஞ்சு ஒரு வாரத்துக்கு மேலாகிடுச்சு. இன்னமும் அதே கூட்டணி ஃபீலிங்குலேயே இருக்கீங்க. சட்டுபுட்டுன்னு சட்டய மாத்திட்டு கூடவே கூட்டணியையும் மாத்துங்க. அப்புறம் கையோட கொள்கையையும்........)

*    அதிக பணம் தந்தால், தங்களின் விளை நிலங்களை விற்க விவசாயிகள் தயாராக இருப்பது போல் கே.எஸ்.அழகிரி பேசுகிறார். இது விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப் படுத்தும் செயல்: ஜி.கே.மணி. 
(அண்ணே விவசாயிங்க பிரச்னையை பத்தியெல்லாம் நாம பேசலாமாண்ணே? சேலம், தர்மபுரின்னு நம்ம கோட்டையா காட்டுற எடங்கள்ள விதைநெல்லை பிடுங்கிட்டு எட்டு வழி சாலைக்கு நடு கல் நட்டுன ஆளுங்களோடு கூட்டணி வெச்ச நமக்கு எதுக்குண்ணே இந்த வீறாபெல்லாம்? பக்கோடா சாப்பிட்டோம, பல்லை குத்தினோமான்னு இருங்க தல)

*    ஓட்டுப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் நான்கு அடுக்கு பாதுகாப்பு உள்ளது. துணை ராணுவ வீரர்கள் 988 பேர் அறைகளுக்கு வெளியே நிற்கின்றனர், இருபது முதல் இருபத்தைந்து வீரர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பர், இரண்டாவது அடுக்கில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் 1522 பேர் உள்ளனர், மூன்றாவது அடுக்கில் 1589 ஆயுதப்படை போலீஸார்....: சத்யபிரதா சாஹூ
(பாஸ் பாஸ் நிறுத்துங்க நிறுத்துங்க. இம்பூட்டும் சொல்றீங்களே, ஜெராக்ஸ் எடுக்குற மெஷின் எந்த இடத்துல இருக்குதுன்னு உங்களுக்கு தெரியுமா இல்லே அந்த தாசில்தாரம்மா சம்பூர்ணத்துட்ட கேட்டு சொல்றீகளா?)

Follow Us:
Download App:
  • android
  • ios