மு.க.ஸ்டாலின்  சென்ற காரை திடீரென வழிமறித்து முரசொலி அலுவலக மூலப்பத்திரத்தை கேட்டனர். இதனையடுத்து  ஸ்டாலின் சென்ற காரும் சில நொடிகள் நின்றது.   

மதுரையில் திமுக ஆதரவு பெற்ற கிறிஸ்தவ அமைப்புகள் சார்பாக நடைபெறும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கோள்வதற்காக மு.க.ஸ்டாலின் சென்றார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நேற்று நிகழ்ச்சி நடைபெறும் மு.க.ஸ்டாலின் இடத்திற்கு செல்லும்போது மதுரை பாஜகவினர் கட்சிக் கொடியுடன் 10க்கும் மேற்பட்டோர் மு.க.ஸ்டாலின் சென்ற காரை திடீரென வழிமறித்து முரசொலி அலுவலக மூலப்பத்திரத்தை கேட்டனர். இதனையடுத்து ஸ்டாலின் சென்ற காரும் சில நொடிகள் நின்றது. இதனை சற்றும் எதிர்பாராத அவரது பாதுகாவலர்கள் பதற்றம் அடைந்தனர். இந்நிலையில் சூழ்நிலையை புரிந்து கொண்ட பாதுகாவலர்கள் பாஜகவினரை உடனடியாக அப்புறப்படுத்தினர்.