63% மக்களின் ஆதரவு பெற்ற ஜோதிமணி எங்கே..? நோட்டாவைவிட கீழான வாக்குகளை பெற்ற கரு.நாகராஜன்  எங்கே..? eன திமுக எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

 

தொலைக்காட்சி விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியை பாஜக பிரமுகர் கரு.நாகராஜன் முன்றாம் தரப்பெண் என இழிவாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து திமுக எம்.எல்.ஏ., ஜோதிமணியின் நண்பருமாகிய செந்தில் பாலாஜி ‘’6,95,697 மக்கள் ( 63%)  வாக்களித்து வெற்றி பெற்ற, மக்கள் பிரதிநிதி, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் S.ஜோதிமணி, 23 ஆண்டுகள் பொதுவாழ்வில் நேர்மையையும் கண்ணியத்தையும், தூய்மையையும் தொடர்ந்து கடைப்பிடிப்பவர். ஒன்றிய குழு உறுப்பினராக தனது அரசியல் வாழ்வை தொடங்கி, எம்.பியானவர்.

 

விரைவில் இதற்க்கு ஒரு முடிவை காலமே பாஜகவினருக்கு வழங்கும். நோட்டாவை நம்பிய மக்கள் கரு.நாகராஜனை நம்பவில்லை. மேலும் கரு.நாகரராஜன் பொதுவாழ்வுக்கு அர்த்தமற்றவர் என்பதை தேர்தலில் மக்களே விளக்கியுள்ளனர். 63% மக்களின் ஆதரவு பெற்ற ஜோதிமணி எங்கே..? நோட்டாவைவிட கீழான வாக்குகளை பெற்ற கரு.நாகராஜன்  எங்கே..? மக்கள் தீர்ப்பே.. மகேசன் தீர்ப்பு... நல்ல மாட்டுக்கு ஒரு சூடு..? எனத் தெரிவித்துள்ளார்.