இந்தியர்களுக்கு எப்போ தடுப்பூசி கிடைக்கும் மோடிஜி..! நச்சுனு 4 கேள்வி கேட்ட ராகுல்காந்தி..!

இந்தியர்கள் அனைவருக்கும் எப்போது கொரோனா தடுப்பூசி போடப்படும் என்பது உள்ளிட்ட 4 கேள்விகளுக்கு பிரதமர் மோடி தேசத்துக்கு பதில் அளிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
 
When will Modiji get vaccinated for Indians ..! Rahul Gandhi asked 4 questions ..!

உலகம் முழுவதையும் அலற வைத்து கொண்டிருக்கும் தொற்று நோயான கொரோனா வைரஸ்க்கு பல மருந்து நிறுவனங்கள் தடுப்பூசி கண்டுபிடித்து சோதனை செய்து வருகின்றனர். சில நிறுவனங்களின் தடுப்பூசிகள் கடைசி கட்ட சோதனையில் உள்ளன. சோதனையில் நல்ல முடிவுகள் கிடைத்து வருகின்றன. வரும் டிசம்பரில் கொரோனா தடுப்பூசி முதலில் அமெரிக்காவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

When will Modiji get vaccinated for Indians ..! Rahul Gandhi asked 4 questions ..!

இந்தியாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசி கிடைத்தவுடன் யாருக்கெல்லாம் முதலில் போட வேண்டும் என்று இப்போதே மத்திய அரசு திட்டமிட தொடங்கி விட்டது. இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கொரோனா தடுப்பூசி தொடர்பாக நான்கு கேள்விகளை கேட்டு அதற்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ராகுல் காந்தி டிவிட்டரில்.., "பிரதமர் தேசத்துக்கு சொல்ல வேண்டும். 1. அனைத்து கோவிட் தடுப்பூசி வேட்பாளர்களில் (உற்பத்தியாளர்கள்), எதை மத்திய அரசு தேர்வு செய்யும் மற்றும் ஏன்? 2. யார் முதலில் தடுப்பூசி பெறுவார்கள் மற்றும் விநியோக திட்டம் என்ன? 3. தடுப்பூசி இலவசமாக போடுவதை உறுதி செய்ய பி.எம். கேர்ஸ் நிதி பயன்படுத்தப்படுமா? 4. எல்லா இந்தியர்களுக்கும் எப்போது தடுப்பூசி போடப்படும்"? 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios