when will 4th schedule keezhadi excavation said minister pandiarajan
சிவகங்கை மாவட்டம் கீழடியில் மூன்று கட்ட அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிந்தவுடன் மூடப்பட்டுவிட்டன.
இந்நிலையில், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மற்றும் கதர் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர் கீழடியில் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், 4-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் கீழடியில் இன்னும் ஒன்றரை மாதத்தில் தொடங்கப்பட்டு 6 மாதங்களுக்கு மேற்கொள்ளப்படும் எனவும் அதற்காக 55 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள அருங்காட்சியங்களைப் மேம்படுத்த அரசு முயற்சிசெய்யும் என்றும் தெரிவித்தார்.
