Asianet News TamilAsianet News Tamil

பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷின் புதிய அறிவிப்பு

பள்ளி மாணவர்களுக்கு மே முதல் வாரத்தில் தான் தேர்வுகள் தொடங்க உள்ளதால் கோடை விடுமுறை எப்போது என்ற தகவலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

When is the summer vacation for school students Minister Anbil Mahesh new announcement
Author
Tamilnadu, First Published Mar 29, 2022, 10:31 AM IST

கொரோனாவால் தேர்வுகள் தாமதம் 

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு வருடமாக பள்ளிகள் முழுமையாக செயல்படாத நிலை தான் நீடித்து வந்தது.  இந்த நிலையில் தற்போது 3 வது கொரோனா பரவலுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறந்து செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் பள்ளி மாணவர்களுக்கு எப்போது கோடை விடுமுறை வழங்கப்படும் என மாணவர்கள் மட்டுமில்லாமல் பெற்றோர்களும் எதிர்பார்த்து காத்துள்ளனர். கடந்த முறை  +2 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதம் தேர்வு தொடங்கி ஏப்ரல் மாதம் முடிவடைந்து விடும் மற்ற மாணவர்களுக்கு ஏப்ரல் மத்தியில் துவங்கி மே முதல் வாரம் முடிந்து விடும். இதனை தொடர்ந்து கோடை விடுமுறை விடப்பட்டு  ஜீன் முதல் வாரம் பள்ளிள் துவக்கப்படும். ஆனால் இந்த முறை கொரோனா பாதிப்பு காரணமாக அனைத்து தேர்வுகளும் காலம் தாமதமாக நடைபெறுகிறது. 10 மற்றும் +2 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு எப்போது தொடங்கும் என மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில்  மே மாதம் முதல் வாரத்தில் தான் தேர்வுகள் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்தநிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள  பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை எப்போது விடுவார்கள் என பெற்றோர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

When is the summer vacation for school students Minister Anbil Mahesh new announcement
கோடை விடுமுறை எப்போது ?

இந்தநிலையில் திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனத்திற்கு வந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கோடை விடுமுறை எப்போது என்ற தகவலை தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பின் காரணமாக அனைத்து தேர்வுகளும் காலம் தள்ளி  தான் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இந்தநிலையில்  மே 5ஆம் தேதி தேர்வுகள் தொடங்கி மே  28ஆம் தேதி தான்  முடிவடைய உள்ளதாக கூறினார். அடுத்த கட்டமாக பாட திட்டங்களை  முடிப்பது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என கூறினார். ஏற்கனவே அறையாண்டு தேர்வுக்கு டிசம்பர் மாதத்தில் விடுமுறை வழங்கப்பட்டதாகவும் கூறினார். எனவே கோடை விடுமுறை தொடர்பாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தி தான் முடிவெடுக்க முடியும் என கூறினார்.  ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு கோடை விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளி வரும் என தெரிவித்தார். எனவே 1 ஆம் வகுப்பு முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 15 ஆம் தேதிக்கு பிறகு விடுமுறை விடப்பட்டு ஜீன் 13 ஆம் தேதி வரை சுமார் ஒரு மாத காலத்திற்கு கோடை விடுமுறை விட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகராப்பூர்வ ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படவுள்ளது..


 

Follow Us:
Download App:
  • android
  • ios