திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சி தனி சின்னத்தில் போட்டியிடுமா அல்லது திமுக சின்னத்தில் போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இடம் பெற்றுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த மனிதநேய மக்கள் கட்சி, 4 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் மனிதநேய மக்கள் கட்சி தோல்வியடைந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இடம் பெற்றிருந்தபோதும், தேர்தலில் போட்டியிடாமல் திமுக கூட்டணியை ஆதரித்தது. திமுக சின்னத்தில் போட்டியிட வேண்டும் என திமுக தலைமை கூறியதால் அந்த தேர்தலில் மமக போட்டியிடவில்லை என்று கூறப்பட்டது.
இந்நிலையில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட மமக முடிவு செய்துள்ளது. ஆனால், சிறிய கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக அழுத்தம் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனவே கடந்த காலத்தில் போட்டியிட்டது போலவே தனி சின்னத்தில் போட்டியிடுவதா அல்லது திமுக சின்னத்தில் போட்டியிடுவதா என்ற குழப்பத்தில் அக்கட்சி இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே மமகவின் செயற்குழு வரும் 22ம் தேதி ஈரோட்டில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் இதுதொடர்பாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 18, 2020, 9:06 PM IST