BF7Variant வகை கொரோனா தொற்றை எதிர்கொள்ள அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? மாஸ் காட்டும் மா.சு..!

கொரோனா தொடர்பான கட்டமைப்பை 2 நாளில் ஆய்வு செய்து உறுதிபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவமனைகளில் 1.75 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. 1954 டன் ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது. மருத்துவமனையில் உள்ள வசதிகளை 24 மணிநேரத்திற்குள் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

What steps has the government taken to counter the BF7Variant Corona infection? ma. subramanian information

பிஎப் -7 வகை கொரோனா தொற்றை எதிர்கொள்ள அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன?  என்பது குறித்து சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். 

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- கொரோனாவை எதிர்கொள்ள தமிழகம் தயாராகி வருகிறது. மருத்துவமனைகளில் மருந்து கையிருப்பு நிலவரத்தை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 10க்கும் கீழே உள்ளது. நேற்று 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 51ஆக உள்ளது.

இதையும் படிங்க;- India Corona Cases: ஆக்சிஜன் சிலிண்டர்கள இருப்பைச் சரிபாருங்கள்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை

What steps has the government taken to counter the BF7Variant Corona infection? ma. subramanian information

கொரோனா தொடர்பான கட்டமைப்பை 2 நாளில் ஆய்வு செய்து உறுதிபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவமனைகளில் 1.75 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. 1954 டன் ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது. மருத்துவமனையில் உள்ள வசதிகளை 24 மணிநேரத்திற்குள் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

What steps has the government taken to counter the BF7Variant Corona infection? ma. subramanian information

அந்தந்த மாவட்ட மருத்துவ அதிகாரிகள் மருத்துவமனைகளில் சென்று நேரில் ஆய்வு செய்ய வேண்டும். மாதிரிகள் பகுப்பாய்வு செய்யும் வசதி தமிழகத்திலேயே உள்ளது என  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க;-  Corona in India: துபாயில் இருந்து உத்தரப் பிரதேசம் திரும்பிய 2வது நபருக்கு கொரோனா தொற்று

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios