நடிகை சிம்ரன் வாடி வற்றிப்போய் போட்டோக்களை பகிர்ந்து வருகிறார். அவரது ஃபாலோயர்கள் எப்படி இருந்த சிம்ரன் இப்படி ஆகி விட்டாரே என வருத்தப்பட்டு வருகின்றனர். ஆனாலும் என்ன சிம்ரன் இதெல்லாம் எனக் கேட்க வைக்கிறது அவரது சமூகவலைதள பகிர்வுகள். சமீபத்தில் பாரில் ஒரு இளைஞருடன் அவர் போட்ட உரசல் டான்ஸ் வேற ரகம்.

இந்திய அளவில் திரைப் பிரபலங்களை டிக்டாக் நிறுவனம் நாடி அவர்களிடம் டிக்டாக்கை பயன்படுத்தக் கோரியுள்ளது. இதன் ஒரு பகுதியாக பாலிவுட் நடிகை சன்னி லியோன் உள்ளிட்ட பிரபலங்கள் டிக்டாக்கில் ஆக்டிவாக மாறியுள்ளனர்.

 

இந்நிலையில் நடிகை சிம்ரன் 1999-ம் ஆண்டு வெளியான வாலி படத்தில் இடம் பிடித்திருந்த ஏப்ரல் மாதத்தில் பாடலுக்கு மீண்டும் அதே ஸ்டைலுடன் நடனமாடியுள்ளார். இதைக் கண்டு அவரின் ரசிகர்கள் நடனத்தை வைரலாக்கி வருகின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ”வயசானாலும் ஸ்டைலும் அழுகும் மாறல”போன்ற வசனங்களைப் பகிர்ந்து வருகிறார்கள் சிம்ரன் ரசிகர்கள். தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட அனைத்து ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்த சிம்ரன் சமீபத்தில் ரஜினிக்கு ஜோடியாக ’பேட்ட’படத்தில் நடித்திருந்தார். ஆனாலும், தனது டான்ஸ் ஆசையை அவ்வப்போது சமூகவலைதளங்களில் அரங்கேற்றி வருகிறார்.