Asianet News TamilAsianet News Tamil

கட்சியாக உருவெடுக்கிறது அமமுக... டி.டி.வி.தினகரன் தேர்ந்தெடுக்கப்போகும் சி்ன்னம் குக்கரா..? பரிசுப்பெட்டியா..?

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கட்சியாக இந்திய தேர்தல் ஆணையத்தில் டி.டி.வி.தினகரன் பதிவு செய்ய முடிவெடுத்து அக்கட்சியின் பொதுச்செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் டிடிவி.தினகரனுக்கு ஆர்.கே.நகரில் மாபெரும் வெற்றி தந்த குக்கர் சின்னத்தை தேர்வு செய்வாரா? அல்லது குறுகிய காலத்தில் மிகவும் பிரபலம் அடைந்த பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்வு செய்வாரா என தொண்டர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. 

What is the decision of TTV Dinakaran
Author
Tamil Nadu, First Published Apr 19, 2019, 5:52 PM IST

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கட்சியாக இந்திய தேர்தல் ஆணையத்தில் டி.டி.வி.தினகரன் பதிவு செய்ய முடிவெடுத்து   அக்கட்சியின்  பொதுச்செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் அவரது கட்சிக்கு நிரந்தரமாக சின்னம் ஒதுக்கப்பட உள்ளது. டி.டி.வி.தினகரனுக்கு ஆர்.கே.நகரில் மாபெரும் வெற்றி தந்த குக்கர் சின்னத்தை தேர்வு செய்வாரா? அல்லது குறுகிய காலத்தில் மக்களிடம் சென்று சேர்ந்த பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்வு செய்வாரா என தொண்டர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. 

அதிமுக துணைப் பொதுசெயலாளராக இருந்த டி.டி.வி.தினகரனை அக்கட்சியின் தற்போதைய ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் அதிரடியாக நீக்கம் செய்தனர். இதையடுத்து அமமுக கட்சியை ஆரம்பித்து பொதுச்செயலாளராக சசிகலாவும், துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரனும் பொறுப்பு வகித்து வந்தனர். இடையே அதிமுகவை மீட்டே தீருவோம்  வழக்குத் தொடர்ந்தனர்.  ஆகையால் எப்படியும் அதிமுக தங்கள் வசம் வந்துவிடும் என எதிர்பார்த்த அவர்கள்  அமமுகவை கட்சியாக பதிவு செய்யவில்லை.

 இதையடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு ஜெயலலிதாவை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று தமிழக அரசியலை திரும்பி பார்க்க வைத்தார். பலம் வாய்ந்த  திமுகவை டெபாசிட் இழக்க செய்தார்.

 What is the decision of TTV Dinakaran

இதைத்தொடர்ந்து தற்போது நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிட அதே குக்கர் சின்னத்தை டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்தில் கோரினார். ஆனால் தேர்தல் ஆணையம் அந்த சின்னத்தை ஒதுக்கமுடியாது என கூறியது. இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் தரப்பில் பதிவு செய்யாத கட்சிக்கு சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. What is the decision of TTV Dinakaran

அப்போது பதிவு செய்யப்படாத கட்சியாக இருப்பதால் அமமுக கட்சி வேட்பாளர்கள் சுயேட்சை வேட்பாளர்களாக கருதப்படுவார்கள். ஆகையால் அவர்களுக்கு தனித்தனி சின்னம் மட்டுமே ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறியது. ஆனாலும் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்ததால் அமமுகவுக்கு பரிசுபெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டது. தேர்தல் நடைபெறுவதற்கு 5 நாட்கள் முன்னர் தமிழக முழுவதும் ட்விட்டர் மற்றும் சமூகவலைதளங்களில் குறுகிய காலத்தில் பரிசுப்பெட்டி சின்னத்தை அமமுகவினர் பிரபலப்படுத்தினர். இதனை சற்று எதிர்பாராத திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அதிர்ச்சியடைந்தனர். What is the decision of TTV Dinakaran

இந்நிலையில் உச்சநீததிமன்றம் குறுகியுள்ள தீர்ப்பில் தற்காலிகமாக மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் மட்டும் பரிசுப்பெட்டி சின்னத்தை பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளது. ஆனால் வருகிற 4 சட்டமன்ற இடைத்தேர்தலில் பரிசுப்பெட்டி சின்னத்தை பயன்படுத்த முடியாத நிலைக்கு டிடிவி.தினகரன் தள்ளப்பட்டிருந்தார். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு அமமுகவை கட்சியாக பதிவு செய்ய திட்டமிட்டுள்ளார். அதேவேலையில் ஒரு கட்சியை பதிவு செய்ய வேண்டும் என்றால் பொதுச்செயலாளர் கையெழுத்தி இருக்க வேண்டும். ஆனால் சசிகலா ஜெயிலில் இருப்பதால் அமமுக துணை பொதுச்செயலாளராக இருந்த டிடிவி.தினகரன் பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

 What is the decision of TTV Dinakaran

இதனிடையே சுயேச்சையான நின்று முதல் சரித்தர வெற்றியை பெற்று தந்த குக்கர் சின்னத்தை தேர்வு செய்வாரா அல்லது குறுகிய காலத்தில் மக்களிடம் மிகவும் பிரபலம் அடைந்த பரிசுப்பெட்டியை தேர்வு செய்வாரா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Follow Us:
Download App:
  • android
  • ios