ஒருத்தர் பேசவே மாட்டேன்கிறாரு .... ஒருத்தர் பேசுறது என்னன்னே புரியல.  என்ன வாழ்க்கைடா

தமிழ் சினிமாவில் தொண்ணூறுகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் கஸ்தூரி. சில காலம் திரைத்துறையில் இருந்து விலகி இருந்த அவர், கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழ் படத்தின் வாயிலாக மீண்டு சினிமாவுக்கு வந்தார். தற்போது சில படங்களில் நடித்துக் கொண்டு, விவாத மேடைகளிலும் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், தமிழக அரசியல் குறித்து இவர் தனது கருத்துகளை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம். அது, நெட்டிசன்கள் மற்று மீடியாக்களின் கவனத்தைப் பெரும். அதேபோல், இன்று அவர் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் , ’ஒருத்தர் பேசவே மாட்டேன்கிறாரு .... ஒருத்தர் பேசுறது என்னன்னே புரியல. என்ன வாழ்க்கைடா ’என தெரிவித்துள்ளார்.